டாஸ்மாக் அதிரடி.. தமிழகத்தில் 2 நாட்களுக்கு மதுக் கடைகளுக்கு லீவு.. இன்று இறைச்சி கடைகள் இயங்காது
சென்னை: இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகள், மதுபான பார்கள், எலைட் பார்களை 2 நாட்களுக்கு மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதுபோலவே, இன்று ஜனவரி 25 வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று ஜனவரி 25 வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் இறைச்சி கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது...

தைப்பூசம்: இன்று ஜனவரி 25ம் தேதி தைப்பூசம், வள்ளலார் தினத்தை முன்னிட்டும், நாளை மறுநாள் குடியரசு தினத்தை முன்னிட்டும் தமிழகத்தில் 2 நாட்களுக்கு தொடர்ந்து டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
நாளை ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டும் இந்த 2 தினங்களிலும் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின்படி, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (எப்எல் 1) மதுபான சில்லறை விற்பனை கடைகள், அதைச் சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுபானம் விற்பனை: எப்எல் 2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்எல் 3 உரிமம் கொண்ட ஓட்டல் பார்கள் மற்றும் எப்எல் 3ஏ, ஏஏ,மற்றும் எப்எல் 11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் இந்த 2 நாட்களில் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். இந்த இரண்டு நாட்களும் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை கலெக்டர் ரஷ்மிசித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "வடலூர் ராமலிங்க வள்ளலார் நினைவு நாள் 25-ந்தேதி (இன்று வியாழக்கிழமை), குடியரசு தினம் 26-ந்தேதி (நாளை வெள்ளிக்கிழமை) கடைபிடிக்கப்படுகிறது.
சில்லறை விற்பனை: இந்த 2 நாட்களில் தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் மதுக்கூடங்கள், கிளப்புகள், ஓட்டல்களில் உள்ள மதுபார்களை கண்டிப்பாக மூட வேண்டும். விதிமுறைகளை மீறி இந்த 2 நாட்களிலும் மதுபானம் விற்பனை செய்யும் சில்லரை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள், கிளப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார். இதுபோலவே, அனைத்து மாவட்டங்களிலிருந்தும் டாஸ்மாக் கடைகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து 2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், நேற்றுமுன்தினம் இரவு முதலே குடிமகன்கள், அதிகளவில் மதுபானங்களை வாங்கி ஸ்டாக் வைக்க துவங்கியுள்ளனர்.. பல இடங்களில் கைக்கொள்ளாமல் மதுபாட்டில்களை வாங்கிச் சென்றனர். சிலர் பைக்குகளிலும், கார்களிலும் பெட்டி பெட்டியாக மதுபானங்களை வாங்கி சென்றனர்.
-
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
இனி தங்கம் உங்க கையில விளையாடும்! தமிழ்நாடு அரசின் சூப்பர் அறிவிப்பு! 5 நாள் ட்ரெய்னிங் போதும்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
சந்தீப் ராய் ரத்தோருக்கு புதிய பொறுப்பு.. சிறைத்துறை டிஜிபியாக நியமனம் -
புதிய ஆட்சிக்கு இது அழகல்ல.. தென் மாவட்டங்களில் தொடர் சாதிய வன்முறைகள்! கொதித்து பேசிய பா ரஞ்சித் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications