சட்டமன்ற தேர்தல்.. எத்தனை நாள் டாஸ்மாக் விடுமுறை? வெளியான முழு விவரம்!
சென்னை: தமிழ்நாட்டில் ஏப்.23ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. பொதுவாக தேர்தல் நாட்களில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் இந்த தேர்தலுக்கும் எத்தனை நாட்கள் விடுமுறை என்பது குறித்த அறிவிப்பு வெளியாகிறது.
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் எத்தனை நாட்கள் மூடப்பட வேண்டும் என்பது குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறும் வகையில் தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன. பல்வேறு சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட மது முக்கிய காரணமாக இருக்கிறது. எனவே மதுபான கடைகளை மூடுவதன் மூலம் குற்ற சம்பவங்களை குறைக்க முடியும்.
இது குறித்து தேர்தல் ஆணையம் பிறப்பித்திருக்கும் உத்தரவில், "தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் ஏப்.21 முதல் ஏப்.23 இரவு வரை மூடப்பட வேண்டும். புதுச்சேரி எல்லையில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கும் இது பொருந்தும்.
அதாவது அனைத்து மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற வளாகங்களை சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவை முன்னிட்டு ஏப்.21 காலை 10 மணி முதல் ஏப்.23ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தற்காலிகமாக மூட வேண்டும். இந்த உத்தரவை மீறுவோர் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
அதேபோல வாக்குப்பதிவு நடப்பதற்கு 48 மணி நேரத்திற்கு முன்னதாகவே, அனைத்து வகையான பிரச்சாரங்களும் நிறுத்தப்படும். மேலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் அதிக அளவில் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருப்பார்கள். இதன் மூலம் தேர்தல் அமைதியாக நடப்பதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
“ஏன் நடவடிக்கை எடுக்க கூடாது?” ராஜினாமா செய்த 4 அதிமுக எம்எல்ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் -
18 மணிநேரம் தடையில்லா மின்சாரம்.. விவசாயிகளுக்கு சூப்பர் திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் விஜய்! -
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
நீலகிரி டூ கன்னியாகுமரி வரை.. கொட்டி தீர்க்கப்போகும் கனமழை! 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் அலர்ட் -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
மக்கள் தலையில் விழுந்த இடி.. அதிரடியாக உயர்ந்த லாரி வாடகை! எந்தெந்த ஊருக்கு எவ்வளவு தெரியுமா? ஷாக்! -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
கோவை தொடங்கி.. குமரி வரை 4 மாவட்டங்களில் கனமழை! மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம்!












Click it and Unblock the Notifications