Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

18% ஜிஎஸ்டி.. 50% அபராதமா.. டாஸ்மாக் ஊழியர்கள் ஆவேசம்.. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பரபரப்பு கடிதம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பணியாளர்கள், நடைமுறையில் ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் கூறும் குறைபாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் நீக்குவதற்கு மாறாக, நியாயமற்ற பணியாளர் நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறது என்று 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. பணியாளர்கள் மீது கையாடல் குற்றம் சுமத்தி 50 சதவீதம் அபராதம், 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என விதித்து வசூலிக்க வழங்கி உள்ள சுற்றறிக்கையை ரத்து செய்யுமாறு அமைச்சருக்கு வலியுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் 4,829 மதுக் கடைளை டாஸ்மாக் நிறுவனம் இயக்கி வருகிறது. இந்த கடைகளை நவீனமயமாக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதை தடுக்கவும் 'எண்ட் டூ எண்ட்' என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

tasmac senthil balaji

இதன்படி மது பாட்டில்கள் தொழிற்சாலையில் உற்பத்தியாவது முதல் கடைகளில் விற்பனையாவது வரை அனைத்து நகர்வுகளையும் கண்காணிக்க முடியும். தற்போது, இந்த திட்டம் முதற்கட்டமாக ராமநாதபுரம், அரக்கோணம், காஞ்சீபுரம் (வடக்கு), காஞ்சீபுரம் (தெற்கு), கரூர், சிவகங்கை ஆகிய 6 வருவாய் மாவட்டங்களில் செயல்பாட்டில் உள்ளன. விரைவில் தமிழ்நாடு முழுவதும் கொண்டுவரப்பட உள்ளது.
இந்த திட்டத்தில், மதுக்கடைகளில் பணிபுரியும் விற்பனையாளரிடம் செல்போன் வடிவிலான 'ஸ்கேனர்' கருவியும், சிறிய வடிவிலான 'பில்' போடும் கருவியும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த 2 கருவிகளும் 'புளூடூத்' மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது.

இந்த புதிய முறையால், நீண்ட பல காலமாக இருந்துவரும், "மது பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது" என்ற குடிமகன்களின் குற்றச்சாட்டு முடிவுக்கு வரவில்லை.. மாறாக முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துபாட்டிலை விற்பதால் எப்போதும் போல் தான், பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தொடர்கிறது. இதனால் மதுக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர், விற்பனையாளர்களுக்கு கிடுக்குப்பிடி போட டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாக முடிவு செய்தது. இது தொடர்பாக, மது விற்பனை நவீனப்படுத்தப்பட்டுள்ள 6 வருவாய் மாவட்ட மேலாளர்களுக்கு டாஸ்மாக் நிர்வாக மேலாண்மை இயக்குநர் ச.விசாசன் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறுகையில், "மேற்படி வருவாய் மாவட்டங்களில் சில மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே அதிக அளவில் விற்பனை வித்தியாசம் உள்ளது. இதை தடுக்க சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றது. அதன் விவரம் வருமாறு:-

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் விற்பனையின்போது நுகர்வோர் விரும்பி கேட்கும் மதுபானங்களுடன் அதற்குண்டான ரசீதுகள் கண்டிப்பாக வழங்கப்பட வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் நுகர்வோருக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படும் பொழுது மட்டுமே ஸ்கேன் செய்து விற்கப்பட வேண்டும்.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருப்பில் உள்ள மதுபானங்களை முன்கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு நுகர்வோருக்கு விற்பனை செய்தல் கூடாது.

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் இருந்து குறுஞ்செய்தி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும், கையடக்க கருவி வாயிலாக பெறப்பட்ட விற்பனை புள்ளி விவரங்களுக்கும் இடையே ஏற்படும் வேறுபாடு மிகையான விற்பனை தொகையாக இருப்பினும், அதனை கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யப்படும்போது சரிவர ஸ்கேன் செய்யாமல் விற்பனை செய்ததாகவே கருதப்படும். ஆக, மிகையான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50 சதவீதம் அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி 24 சதவீதம் (ஆண்டுக்கு) மற்றும் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் என 5-12-2024 முதல் வசூலிக்கப்படும்.

மேலும் கடைப்பணியாளர்கள் விற்பனை செய்யும்போது ஸ்கேன் செய்யாமல், முன் கூட்டியே ஸ்கேன் செய்து வைத்துக்கொண்டு விற்பனை செய்ததனாலேயே குறைவான தொகை, அசல் விற்பனைத் தொகையைவிட குறைவான தொகைக்கு விற்பனை செய்ததாக கருதப்படுகிறது.
ஆக, குறைவான தொகையென கண்டறியப்படும் தொகையின் மீது 50 சதவீதம் அபராதத் தொகை, அபராதத் தொகை மீதான வட்டி 24 சதவீதம் (ஆண்டுக்கு) மற்றும் ஜி.எஸ்.டி. 18 சதவீதம் என 5-12-2024 முதல் வசூலிக்கப்படும். மேற்படி தவறான செயல்பாடுகளை கண்காணிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட மாவட்ட மேலாளர் மற்றும் உதவி மேலாளர் (கணக்கு) ஆகியோரே இதற்கு முழு பொறுப்பாவார்கள். அவர்களிடம் துறை ரீதியான உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

டாஸ்மாக் நிர்வாகத்தின் இந்த சுற்றறிக்கை டாஸ்மாக் பணியாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் தங்களுக்கு உள்ள பல்வேறு குறைகளை கூறி சரிசெய்ய வலியுறுத்தி வருகிறார்கள். அப்படி செய்தால் கூடுதல் தொகை வசூலிப்பது நிற்கும் என்கிறார்கள்.

இந்நிலையில் தமிழக மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 'டாஸ்மாக்' பணியாளர்கள் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, பொதுச்செயலாளர் தனசேகரன் ஆகியோர் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறுகையில், "மதுபானங்கள் விற்பனையில் உற்பத்தி முதல் விற்பனை வரை தவறுகளை முழுமையாக களைய வேண்டும் என்ற நோக்கத்தில் டாஸ்மாக் நிர்வாகம் 'எண்ட் டூ எண்ட்' என்ற கணினி முறையை அறிமுகம் செய்துள்ளது. ராமநாதபுரம், ராணிப்பேட்டை, காஞ்சீபுரம் வடக்கு, தெற்கு, கரூர் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்பாட்டில் இருந்து வருகிறது.

இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் இடையூறுகள், தவறுகள் குறித்து டாஸ்மாக் நிர்வாகத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று தீர்வு காண வேண்டும் என்று சங்கத்தின் சார்பில் வலியுறுத்தி வருகிறோம். பணியாளர்கள், நடைமுறையில் ஏற்படும் அனுபவத்தின் அடிப்படையில் கூறும் குறைபாடுகளை டாஸ்மாக் நிர்வாகம் நீக்குவதற்கு மாறாக, நியாயமற்ற பணியாளர் நடைமுறைகளில் ஈடுபட்டு வருகிறது.

கடைப்பணியாளர்கள் கையாளும் விவரங்களும், கணினி தரும் விவரங்களும் எங்கே வேறுபடுகிறது. முரண்பாட்டின் வேர் எங்கே இருக்கிறது? என்பதை கண்டறிந்து முறைப்படுத்த வேண்டிய நிர்வாகம், பணியாளர்கள் மீது கையாடல் குற்றம் சுமத்தி 50 சதவீதம் அபராதம், 18 சதவீதம் ஜி.எஸ்.டி. என விதித்து வசூலிக்க வழங்கி உள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, தவறுகள் களைந்த கணினி செயல்முறைக்கு தகுந்த உத்தரவை தாங்கள் பிறப்பிக்க வேண்டும்" இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+