Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ரத்தீஸுடன் வெளிநாட்டிற்கு தப்பி ஓடிய "பிரபலம்".. அட அவரா.. அமலாக்கத்துறை போட்ட ஸ்கெட்ச்! போச்சு

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற உதயநிதியின் நண்பர் ரத்தீஸ், இந்த வாரத்தில் சென்னை திரும்பவிருக்கிறாராம். அப்போது அவரை விசாரிக்க அமலாக்கத்துறை பெரிய அளவில் திட்டங்களை வகுத்து உள்ளது.

டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையின் விசாரணைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்திருந்தது உச்சநீதிமன்றம். மேலும், விசாரணைக்கு தடையும் கொடுத்திருக்கிறது,

"இந்த உத்தரவு அமலாக்கத்துறைக்கு பின்னடைவு போலவும், தமிழக அரசுக்கு வெற்றி போலவும் திமுகவினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், ஜஸ்ட் ஒரு ரிலீஃப்பை திமுகவுக்கு கிடைத்திருக்கிறதே தவிர, நிரந்தரமாக இல்லை. அமலாக்கத்துறை தாக்கல் செய்யும் பதில் மனுவிற்கு பிறகு திமுகவின் சந்தோசமும், கொண்டாட்டமும் காணாமல் போகும்" என்று கமென்ட்ஸ் அமலாக்கத்துறை வழக்கறிஞர்கள் வட்டாரங்களில் எதிரொலித்தபடி இருக்கிறது.

உச்சநீதிமன்றத்தின் உத்தரவினால் திமுக தரப்புக்கு தற்காலிக சாதகம் கிடைத்திருக்கும் சூழலில், வெளிநாட்டிற்கு தப்பிச் சென்ற உதயநிதியின் நண்பர் ரத்தீஸ், இந்த வாரத்தில் சென்னை திரும்பவிருக்கிறாரம். அவர் தப்பிச் செல்லும் போது அபருடன் சென்னையின் பிரபல மருத்துவமனையின் வாரிசு ஒருவரும், பிரபல கட்டுமான நிறுவனத்தின் தொழிலதிபர் ஒருவரும் ரத்தீஸுடன் பறந்தார்களாம். ரத்தீஸ் சென்னை திரும்பும்போது இவர்களும் திரும்புவார்களாம். அவர்கள் சென்னை திரும்பியதும், ரத்தீஸிடம் விசாரிக்கிறதோ இல்லையோ அவருடன் சென்ற இரண்டு நபர்களிடமும் விசாரிக்க அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் கிடைகின்றன.

Tasmac Enforcement directorate case Ratheesh might be arrested once he return to Chennai

அமலாக்கத்துறைக்கு தற்காலிக பின்னடைவு

அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் டாஸ்மாக் சார்பாக தொடரப்பட்ட வழக்கில்தான் இன்று அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறி செயல்படுவதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழக டாஸ்மாக்கிற்கு எதிரான விசாரணையை தொடர்ந்து நடத்தலாம் என்று கடந்த மாதம் உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை 22-ந்தேதி (வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான முதல் அமர்வு, தனி நபர் செய்த தவறுகளுக்காக ஒரு நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதா? எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ? என்று அடுக்கடுக்காக கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வரம்பு மீறி செயல்படுகிறது என்றும் கண்டனம் தெரிவித்தது. இறுதியில், டாஸ்மாக்கிற்கு எதிரான அமலாக்கத்துறையின் விசாரணைக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்.

அதிமுகவிற்கு சிக்கல்

இந்த வழக்கில், தலைமை நீதிபதி கவாய், அமலாக்கத் துறை அனைத்து விதிகளையும் மீறுகிறது; வரம்பு மீறி நடக்கிறது. முறைகேடு நடந்தது என்றால் சம்பந்தப்பட்ட தனி நபர்கள் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கலாம் டாஸ்மாக் தொடர்பான வழக்கில், அதிகாரிக்கு எதிராக FIR பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அமலாக்கத்துறைக்கு அங்கு என்ன வேலை?

தனி நபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா. எந்த மூல வழக்கின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது ?டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத்துறை தன்னுடைய எல்லைகளை தாண்டி செயல்பட்டுள்ளது. கூட்டாட்சி அமைப்பையே தனது நடவடிக்கையால் சிதைத்துள்ளது என்று அமலாக்கத்துறை விசாரணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி காட்டமாக தெரிவித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+