டாஸ்மாக் முறைகேடு வழக்கில் அதிரடி.. செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கரூரை சேர்ந்த இருவர் கைது!

Subscribe to Oneindia Tamil

சென்னை: செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். டாஸ்மாக் முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான கார்த்திக் மற்றும் ரமேஷ் ஆகியோரை கைது செய்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் குதிரை பேர வழக்கில் ஜாமீனில் வெளிவந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஜாமீனில் வெளிவந்த சில நாட்களிலேயே, தற்போது டாஸ்மாக் முறைகேடு ஊழல் வழக்கிl லஞ்ச ஒழிப்புத் துறையால் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருப்பது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

tasmac

முந்தைய திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் டாஸ்மாக் முறைகேடுகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது நெருங்கியவர்களுக்கு தொடர்புடைய 41 இடங்களில், லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை முதல் ஒரே நேரத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

டாஸ்மாக் நிறுவனத்தில் முறைகேடுகள் மற்றும் மதுபான ஆலைகளிடம் பணம் வசூலித்ததாக எழுந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, டாஸ்மாக் முன்னாள் நிர்வாக இயக்குநரான ஐஏஎஸ் அதிகாரி எஸ். விசாகன் உள்பட 7 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

டாஸ்மாக் முன்னாள் மண்டல மேலாளர்கள் ராமதுரை முருகன், பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளர் பாஸ்கர், ரத்தேஷ் ராஜ், மூலனூர் கார்த்தி ஆகியோர் மீதும் லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு சென்னை உயர் நீதிமன்றம் முன் ஜாமீன் மறுத்த நிலையில், அவர் உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி மேல்முறையீடு செய்தார். உச்ச நீதிமன்றம் இன்று (ஜூலை 31) செந்தில் பாலாஜிக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளது.

இதற்கிடையே நடைபெற்ற விசாரணையின் போது கார்த்திக் மற்றும் அவருக்கு நெருக்கமான கரூரைச் சேர்ந்த ரமேஷ் ஆகியோர் ஜூலை 30ஆம் தேதி கைது செய்யப்பட்டு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். தற்போது அவர்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்று லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக த.வெ.க ஆட்சியை கவிழ்ப்பதற்காக சதித்திட்டம் நடந்ததாக, ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ இளையராஜா கொடுத்த புகாரின் அடிப்படையில், சென்னை திருவல்லிக்கேணி போலீசார் ஒரு வழக்கை பதிவு செய்தனர். இந்த வழக்கில் செந்தில்பாலாஜி மீதும், அவரது தம்பி அசோக்குமார் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.

இந்த குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்களான கரூர் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரான ரமேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் தான் அவர்கள் இருவரும் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தவெக எம்.எல்.ஏ குதிரை பேர வழக்கில் செந்தில் பாலாஜியும், அவரது தம்பி அசோக் குமாரும் ஐகோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றனர். முன்ஜாமீன் நிபந்தனைப்படி அவர்கள் இருவரும், திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+