சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டாஸ்மாக் மதுபானங்களை திருமண மண்டபங்களுக்கு உடனே மாற்ற தமிழக அரசு அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் முழுவதும் உள்ள 5,300 கடைகளில் உள்ள மதுபானங்களை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றுமாநு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    கொரோனாவால் குறைந்த குற்றசெயல்கள்

    21 நாட்கள் ஊரடங்கு காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகள் மார்ச் 24ம் தேதி மாலை 6 மணி உடன் மூடப்பட்டது . குடிமகன் எல்லோரும் ஊடரங்கு ஏப்ரல் 1ம் தேதி வரை தான் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்ததை நம்பி, ஏப்ரல் 1ம் தேதி வரைக்குமான சரக்குகளை மட்டுமே வாங்கி வைத்திருந்தனர். ஆனால் திடீரென அன்று இரவே பிரதமர் மோடி 21 நாட்கள் ஊரடங்கு அறிவித்தார்.

    இதனால் குடீமகன்கள் ஏப்ரல் 1ம் தேதிக்கு மது அருந்துவதற்கு வழியில்லாமல் வன்முறையில் ஈடுபட தொடங்கி உள்ளார்கள். குடும்பத்தில் சண்டை போடுவது, வன்முறையில் ஈடுபடுவது, தற்கொலை செய்து கொள்வது வரை அதிகரித்துள்ளது.

    கொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு! கொரோனா.. மோசமாக பாதித்த கேரளா, தமிழகம்.. குறைந்த அளவே நிதி ஒதுக்கீடு.. மத்திய அரசு ஷாக்கிங் முடிவு!

    மது இல்லாததால்

    மது இல்லாததால்

    தமிழகத்தில் மது அருந்த முடியாதது மற்றும் போதைக்காக அபாயகரமான வற்றை அருந்தியவர்கள், மது குடிக்காதால் வன்முறை என இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர், இதனிடையே கொரோனாவிலும் 5 பேர் தான் இறந்துள்ளனர். மது விவாகரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில் எப்படியாவது சரக்கு அடித்தே தீர வேண்டும் என்று மாநிலம் முழுவதும உள்ள குடிநோயாளிகளில் சிலர் கள்ளச்சாரயம் குடிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர். அப்படிப்பட்ட சம்பவங்கள் ஆங்காங்கே நடந்திருக்கிறது.

    அதிகரிக்கும் சம்பவங்கள்

    அதிகரிக்கும் சம்பவங்கள்

    இது ஒருபுறம் எனில் கடையை உடைத்து சரக்கு திருடுவது நடந்துவருகிறது. தமிழகத்தில் உள்ள 5,300 கடைகளில் பல கடைகள் கிராமங்களில் உள்ளது. இந்த கடைகளில் சுமார் பத்து முதல் பதினைந்து லட்ச ரூபாய் மதிப்புள்ள மது பாட்டில்கள் இருப்பில் உள்ளன. இப்படி மொத்தம் உள்ள மது பாட்டில்களின் மதிப்பு பல கோடிகளை தாண்டும். இந்நிலையில் மது அருந்தியே தீர வேண்டும் என்று வெறியில் உள்ள நோயாளிகள் கும்பலாக கடைகளை அடித்து உடைத்து திருட முயலும் ஆபத்தும் உள்ளது.

    அவசரமாக மாற்றுக

    அவசரமாக மாற்றுக

    இதையடுத்து கடைகளில் உள்ள சரக்குகளை போலீஸ் பாதுகாப்புடன் அருகில் உள்ள திருமண மண்டபங்களுக்கு மாற்றுங்கள்' என மாவட்ட எஸ்.பி-க்கள் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு ஆலோசனை கொடுத்துள்ளதாம். இந்தத் தகவல் முதல்வர் பழனிச்சாமிக்க தெரிவிக்கப்படவே, டாஸ்மாக் துறை உயர் அதிகாரிகளை அழைத்துப் பேசியிருக்கிறார். அப்போது, `ரகசியமாக ஒட்டுமொத்த சரக்குகளையும் வேறு இடங்களுக்கு மாற்றுவிடுங்கள்' என உத்தரவிட்டாராம். இன்றைய நிலவரப்படி சுமார் 1,000 கடைகளில் இருந்த மதுபானங்கள் இடமாற்றம் செய்யப்பட்டுவிட்டன. மீதிக்கடைகளில் உள்ள மதுபானங்களை படிப்படியாக இடம்மாற்றி வருகிறார்களாம். சரக்கு உள்ள டாஸ்மாக் கடைகளின் வெளியே உள்ள ஷட்டர்களின் மீது இரும்புக் கம்பியால் ஆன பாதுகாப்புக் கவசத்தை டாஸ்மாக் நிர்வாகம் தரப்பில் அமைக்கப்பட உள்ளதாம்.

    ஒரே நாளில் சாதனை

    ஒரே நாளில் சாதனை

    மது போதைக்கு அடிமையானவர்கள் தமிழகத்தில் கிட்டதட்ட ஒரு கோடிக்கு அதிகமானோர் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆண்டுக்கு பல்லாயிரம் கோடி வருவாயை அரசுக்கு தருவது டாஸ்மாக் தான்.தமிழகத்தில் கடைசியாக மார்ச் 23 மற்றும 24ம் தேதி கடை திறந்தது. 24ம் தேதி ஒரு நாளில் வெறும் 6 மணி நேரததில் 200 கோடியைத் தாண்டி மதுவிற்றதாக கூறப்படுகிறது

    English summary
    tasmac liquor bottles are being moved to marriage halls in tamilnadu due to secirity reason
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X