Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பறந்த உத்தரவு.. குடிமகன்கள் தலையில் விழுந்த இன்னொரு இடி.. டாஸ்மாக் விவகாரத்தில் அதிரடி..!

நாளை ஒருநாள் டாஸ்மாக் கடைகள் மூடப்படுகின்றன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஊரக நகர்ப்புற தேர்தல் வாக்கு பதிவினை முன்னிட்டு, 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருந்த நிலையில் நேற்றுதான் கடைகள் திறக்கப்பட்டன.. இந்நிலையில், மீண்டும் ஒரு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த 19ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள இந்த தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் நிறைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது.

ஓட்டுப்பதிவின்போது, அசம்பாவிதங்கள் எதுவும் நடந்துவிடக்கூடாது என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியிருந்தது. அதேபோல டாஸ்மாக் கடைகளும் அடைக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்திருந்தது.

 மதுக்கூடம்

மதுக்கூடம்

"வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளில் 17.2.2022 காலை 10 மணி முதல் 19.2.2022 நள்ளிரவு 12 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 22.2.2022 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகளிலும், மேற்படி பகுதிகளுக்கு அருகில் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் மதுக்கூடம் மற்றும் மதுபானக்கடைகள் மூடியிருக்க உரிய ஆணைகள் வெளியிட வேண்டும்" என்று அரசை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டது.

 டாஸ்மாக்குகள்

டாஸ்மாக்குகள்

அதன்படி, கடந்த 17-ந் தேதி முதல் ஓட்டுப்பதிவு நடைபெற்ற 19-ந் தேதி வரை 3 நாட்கள் மதுக்கடைகள் மூடப்பட்டன... தேர்தல் நடைபெற்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் கடந்த 16-ந் தேதி இரவு 10 மணியுடன் மூடப்பட்டது. இதனால் கடந்த 16-ந் தேதியன்று அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. இதன்மூலம் தினசரி விற்பனையை விட அன்று இரட்டிப்பாக மது விற்பனை நடந்தது.. பிறகு நேற்றுதான், 20-ம்தேதி டாஸ்மாக்குகள் திறக்கப்பட்டன..

 மதுக்கடைகள்

மதுக்கடைகள்

3 நாட்கள் விடுமுறைக்கு பிறகு டாஸ்மாக் திறக்கப்பட்டதால், குடிமகன்கள் டாஸ்மாக்குகளில் அலைமோதினார்கள்.. ஒன்றுக்கும் மேற்பட்ட மது பாட்டில்களையும், சிலர் பெட்டி, பெட்டியாகவும் மதுவை வாங்கி சென்றனர். இதனால் சில கடைகளில் நீண்ட வரிசையில் மது பிரியர்கள் காத்திருந்ததை காண முடிந்தது. இந்நிலையில், நாளைய தினம், ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது. எனவே, ஓட்டு எண்ணக்கூடிய மையங்களுக்கு 5 கி.மீட்டர் தொலைவில் உள்ள மதுக்கடைகள், பார்களை மூட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி உள்ளது...

மதுபிரியர்கள்

மதுபிரியர்கள்

இதையொட்டி, நாளைய தினம் மதுக்கடைகள் மீண்டும் மூடப்படுகின்றன.. மாநிலம் முழுவதும் 268 மையங்களில் இந்த வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. சென்னையில் மட்டும் 15 இடங்களில் நடக்க உள்ளது.. எனவே, அந்த பகுதிகளில் இன்று இரவு 10 மணிவரை மட்டுமே மதுக்கடைகள் செயல்படும்... நாளை மீண்டும் மதுக்கடைகள் மூடப்படும் அறிவிப்பு வெளியாகி விட்டதால், மது பிரியர்கள் முன்னதாகவே மதுவை வாங்கி ஸ்டாக் வைத்து கொள்ளும் முடிவில் இறங்கிவிட்டனர்.

 1700 கடைகள்

1700 கடைகள்

இது குறித்து டாஸ்மாக் நிர்வாக இயக்குனர் சுப்பிரமணியன் சொல்லும்போது, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகின்ற பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தி இருக்கிறது.. தமிழகத்தில் 5,300 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வருகிறது. அவற்றில் 3-ல் ஒரு பங்கு கடைகள் அதாவது சுமார் 1,700 கடைகள் நாளை அடைக்கப்படுகிறது.. தேர்தல் ஆணையத்தின் உத்தரவை ஏற்று அந்தந்த மாவட்ட டாஸ்மாக் மேலாளர்களுக்கு கடைகளை மூடுவதற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+