வந்துருச்சு மெசேஜ்.. இதுதான் ஒரே சாய்ஸ்..அப்ப மதுக்கடை இருக்காதா? டாஸ்மாக் நறுக்.. தமிழக அரசு சரவெடி
சென்னை: தமிழக டாஸ்மாக் கடைகளில் ஏற்படும் கொள்ளைகளை தடுக்க, புதிய அதிரடி ஒன்று கையில் எடுக்கப்பட்டுள்ளது.. என்ன தெரியுமா?
டாஸ்மாக்குகளில் நடைபெறும் கொள்ளையை தடுப்பதற்காக, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையில் எடுத்து வருகிறது.. ஏற்கனவே, டாஸ்மாக் கடைகளில் கொலை, கொள்ளை மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் அதிகம் நடப்பதால்தான், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொருட்டு, டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்த தமிழக அரசு முடிவு செய்திருந்தது.

கேமராக்கள்: அதன்படி 2 வருடங்களுக்கு முன்பு முதற்கட்டமாக, ஒரு டாஸ்மாக் கடைக்கு 2 கேமராக்கள் வீதம் மொத்தம் 3,000 கடைகளில் 6,000 கேமராக்களை பொருத்த தமிழக அரசு அனுமதியும் தந்திருந்தது.
அந்தவகையில், தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 4820 மதுக்கடைகளை நடத்தும் நிலையில், கொள்ளை சம்பவங்களை தடுக்க, 3,000 டாஸ்மாக் கடைகளில் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் 500 கடைகளுக்கு கேமராக்கள் பொருத்த ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய டெண்டர் கோரப்பட்டிருப்பதாக, 3 மாதங்களுக்கு முன்பேயே தகவல் வெளியாகியிருந்தது.. இந்நிலையில், இதுகுறித்த கூடுதல் விவரங்கள் வெளியாகி உள்ளது.
தேர்தல் ஆணையம்: அதாவது, தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் பார்களிலும், சட்ட விரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்துக்கே புகார்கள் சென்றுவிட்டதாம். விரைவில் எம்பி தேர்தல் வர உள்ள நிலையில், இப்படியான புகார்கள் வந்ததுமே, திடீர் அதிரடியை கையில் எடுக்கப்பட்டுள்ளது.
தேர்தல் சமயங்களில் பார்களில் மது விற்பனை நடைபெறுவதை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டாஸ்மாக் நிர்வாகத்துக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, உடனடியாக கேமராவை பொருத்த நடவடிக்கை எடுக்குமாறு, டாஸ்மாக் நிறுவனத்திற்கு, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை ஆணையர் உத்தரவிட்டிருக்கிறார். மேலும், டாஸ்மாக் மாவட்ட மேலாளர்கள் அனைத்து மது கூட உரிமையாளர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பி வைத்திருக்கிறார்,.
டாஸ்மாக்: "மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சென்னை அலுவலக கடிதத்தின்படி 2024-ம் ஆண்டு மக்களவை பொதுத்தேர்தலுக்கான தேர்தல் செலவின கண்காணிப்பு குறித்து இந்திய துணைத்தேர்தல் ஆணையர் 6.2.2024 அன்று நடத்திய கூட்டத்தில் அனைத்து எம்.எல்.2, எப்.எல்3 மற்றும் டாஸ்மாக் பார்களில் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தங்களது மதுக்கூட வளாகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. மேற்கண்ட பணியினை திங்கட்கிழமைக்குள் செய்து முடித்து தங்களது மதுக்கூடத்தில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள புகைப்படத்தை இந்த அலுவலகத்தில் சமர்ப்பிக்க மதுக்கூட உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. தவறும் பட்சத்தில் மதுக்கூட ஒப்பந்ததாரரின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு காப்புத் தொகை பறிமுதல் செய்யப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
நம்பிக்கை : தேர்தல் ஆணையத்தின் இந்த அதிரடியானது, டாஸ்மாக்குகளில் நடைபெறும் கொள்ளைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications