டாஸ்மாக் சுளீர்.. மதுபானங்கள் விலை உயர்கிறது.. குவார்ட்டருக்கு எவ்ளோ பாருங்க..இடிந்துபோன குடிமகன்கள்
சென்னை: டாஸ்மாக் குறித்த முக்கிய அறிவிப்பு விரைவில் வெளியாக போகிறதாம்.. இதைக்கேட்டு குடிமகன்கள் அதிர்ந்து போயுள்ளனர்.
தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடை மூலம் அரசுக்கு வருடத்துக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வந்து கொண்டிருப்பதால், டாஸ்மாக் மதுக்கடைகள் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

பொதுமக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதிகள், பள்ளிக்கூடங்கள் அருகேயும் டாஸ்மாக் மதுக்கடைகள் இன்னும் இயங்கி வருகிறது. இதனால் ஆங்காங்கே பொதுமக்கள் போராட்டத்தையும் முன்னெடுக்கிறார்கள்.
இப்படித்தான், கடந்த வாரமும், திருப்பத்தூர் அருகே அரசு மதுபான கடையை அகற்றக் கோரி 5 வது நாளாக மதுக்கடை முன்பே சமைத்து சாப்பிட்டு பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் கண்டரமாணிக்கம் சாலையில், புஞ்சை நிலத்தில் புதிதாக அரசு மதுபான கடையை திறப்பதால், கொந்தளித்து போன திருப்பத்தூர் 5 கிராம மக்கள், மதுபான கடை வாசலிலேயே உட்கார்ந்துவிட்டார்கள்.
டாஸ்மாக் விலை: போராட்ட களத்திலேயே, சோறு சமைத்து சமைத்து சாப்பிட்டு, போராட்டத்தையும் மேற்கொண்டது பலரது கவனத்தையும் திருப்பியிருந்தது. இந்நிலையில், டாஸ்மாக் விலை உயர போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே, 500 மதுக்கடைகள் குறைக்கப்பட்ட நிலையில், 4829 மதுக்கடைகள் இப்போது செயல்பட்டு செயல்படுகிறது. இதனால், மூடப்பட்ட 500 மதுக்கடைகளால், நஷ்டம் வந்துள்ளால், இதை ஈடுகட்டுவதற்கான நடவடிக்கையை அரசு யோசித்து வருகிறது. சமீபத்தில் உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்திலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டுள்ளது. அப்போது, மதுபாட்டில்கள் விலையை கணிசமாக உயர்த்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளதாம்.
பெரிய சுமை: அதாவது குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்தினால் மக்களுக்கு பெரிய சுமையாக தெரியாது என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது... மேலும், பிராண்டுக்கு ஏற்ப 80 ரூபாய் வரை விலையை உயர்த்தினால் அரசுக்கு கணிசமான தொகை கிடைக்கும் என்றும் ஆலோசனைகள் தரப்பட்டதாக தெரிகிறது.
இதுகுறித்து அதிகாரி ஒருவர் சொல்லும்போது, பிராந்தி, விஸ்கி, ரம், ஜின் உள்ளிட்ட மது வகைகளின் விலையை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் உயர்த்த ஆலோசிக்கப்பட்டது... ஆப் பாட்டில் (375 மி.லி.) ரூ.20 வரையும் முழு பாட்டில் ரூ.30 முதல் ரூ.50-வரை உயர்த்துவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. பிராண்டுகள் அடிப்படையில் ரூ.80 வரை விலை உயர வாய்ப்புள்ளது.
அதிரடி முடிவு: இதே போல் பீர் பாட்டில் விலையையும் ரூ.10 முதல் ரூ.50 வரை விலை உயர்த்த ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு கொள்கை முடிவு எடுத்து விரைவில் அறிவிப்பு வெளியிடும். அப்போது சரக்கு விலைகள் குறித்து தெரிவிப்போம்" என்றார்.












Click it and Unblock the Notifications