Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஸ்கி, பிராந்தி, பீர்.. தஞ்சாவூரில் குவார்ட்டர் பாட்டிலை ஓசியில் எடுக்கிறது? தஞ்சை சிஐடியு சரவெடி

Subscribe to Oneindia Tamil

தஞ்சாவூர்: ஆன்லைனில் டாஸ்மாக் விவகார பரபரப்பு ஒருவழியாக அடங்கியிருக்கும் நிலையில், பார் உரிமையாளர்களை கண்டித்து டாஸ்மாக் ஊழியர்கள் நடத்தியிருக்கும் கண்டன போராட்டம் பெருத்த கவனத்தை ஈர்த்து வருகிறது.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய பலி எண்ணிக்கையை கண்டு, தமிழகமே நிலைகுலைந்து போய்விட்டது. எனவே, மது விற்பனையையும் முழுமையாக தடை செய்ய வேண்டும் என்ற குரல்கள் வெடிக்க துவங்கிவிட்டன.

Tasmac Tamil Nadu Government

விற்பனை: டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், அதை வாங்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து பலர் இறக்க நேரிடுகிறது, அதனால், குறைந்த விலையில் பாக்கெட்டுகளில் மது விற்பனை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு குரல்களும் வெடித்தன. ஆக, ஒருபக்கம் மதுவிற்பனைக்கு தடை, மறுபக்கம் குறைந்த விலையில் மது விற்பனை என்ற இருவிதமான கோரிக்கைகள் தமிழகத்தில் எழுந்துவருகின்றன.

இதற்குநடுவில், கூலித்தொழிலாளர்களும் எளிதில் வாங்கி குடிக்கும் வகையில் 90 மில்லி (கட்டிங்) டெட்ரா பேக் என்று சொல்லப்படும் காகிதக் குடுவையில் மது வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால், இதற்கு பாமக உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தன.
மதுவகைகள்: இப்போது இன்னொரு பரபரப்பு இன்றைய தினம் கிளம்பியது.. குறைந்த அளவில் ஆல்கஹால் கொண்ட மது வகைகளை சொமாட்டோ, ஸ்விக்கி, பிக்பேஸ்கட் போன்ற ஆன்லைன் விநியோக நிறுவனங்கள் மூலமாக வீடுகளுக்கே கொண்டு சென்று விற்க தமிழக அரசு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின. இதற்கும் பாமக தரப்பில் முதல் கண்டன குரல் வெடித்தது.

ஆனால், "ஆன்லைன் மூலம் மதுவை விற்பனை செய்வது உள்ளிட்ட எந்த புது முயற்சியிலும் இறங்க டாஸ்மாக் நிர்வாகத்திடம் திட்டம் இல்லை என்றும், டெட்ரா பாக்கெட் எனப்படும் காகித குடுவையில் மதுபானங்களை அறிமுகம் செய்யவும் திட்டமிடப்படவில்லை" என்றும் டாஸ்மாக் நிர்வாகம் விளக்கம் தந்ததையடுத்து, இந்த சலசலப்பு இன்று முடிவுக்கு வந்தது.

மது பாட்டில்கள்: இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டி மதுபாட்டில்களை வாங்கிச் சென்று, சட்டவிரோதமாக விற்பனை செய்யும் பார் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூரில் டாஸ்மாக் ஊழியர் சிஐடியு சங்கத்தினர் இன்று தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

சங்கத்தின் மாவட்ட தலைவர் கே.மதியழகன் தலைமையில், பொருளாளர் ஏ.ஜி. பன்னீர்செல்வம் முன்னிலையில், சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால் தொடக்க உரையாற்றினார்.. மாவட்டச் செயலாளர் க.வீரையன் கோரிக்கை தொடர்பாக விளக்க உரையாற்றினார்.

ஒப்பந்ததாரர் மூலம், டாஸ்மாக் கடைகளில் மதுபான பெட்டிகளை இறக்குவதற்கு, ஒரு பெட்டிக்கு ரூ.8 கேட்கிறார்களாம்.. இந்த தொகையை வழங்காவிட்டால் டிரான்ஸ்பர் செய்து விடுவோம் என்று மிரட்டுவதாக ஆர்ப்பாட்டத்தின்போது குற்றஞ்சாட்டப்பட்டது..

பெட்டிகள்: அதுமட்டுமல்ல, பெட்டிகளை இறக்கும்போது ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்களை, இலவசமாக லோடுமேன்கள் கையோடு எடுத்து சென்றுவிடுகிறார்களாம். அதேபோல, ஊழியர்களை மிரட்டி, மதுபாட்டில்களை வாங்கி சென்று சட்டவிரோதமாக அவைகளை பார் உரிமையாளர்களே விற்பனை செய்துவிடுவதால், இவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, பார் உரிமத்தையும் ரத்துசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

பல வருடங்களாகவே ஒரே டாஸ்மாக் கடையில் பணியாற்றுபவர்களை பணியிட மாறுதலும், சுழற்சி முறையில் இடமாற்றமும் செய்ய வேண்டும், காலிப்பாட்டில்களை சேகரிக்க தனி இடம் ஒதுக்கீடு செய்து, ஊழியர்களை நியமிக்க வேண்டும், உரிமத்தொகை செலுத்தாததால் அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்ட பார்களை அத்துமீறி திறந்து நடத்தும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை வேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு விருப்பப்படி பணியிட மாறுதல் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களும் எழுப்பப்பட்டன.

ஏற்கனவே, டாஸ்மாக் விற்பனையில் புதிய விதிகளை உருவாக்க வேண்டும் என்று பணியாளர்கள் கோரிக்கைவிடுத்தவாறு உள்ளனர்.. முக்கியமாக, ஒருவருக்கு ஒருமுறை எத்தனை பாட்டில் விற்கப்பட வேண்டும் என்ற விதிமுறையை டாஸ்மாக் உருவாக்க வேண்டும் என்றும், மதுக்கூடத்தில் பணிபுரிவோருக்கு, ஆதார் உள்ளிட்ட அடையாள ஆவணம் பெற்று மது விற்க வேண்டுமா? என்பதை டாஸ்மாக் நிர்வாகம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழக டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் வேண்டுகோள் விடுத்தவாறே உள்ளது.

முக்கிய கவனம்: இப்படிப்பட்ட சூழலில், டாஸ்மாக் ஊழியர் சிஐடியு சங்கத்தினரே பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருப்பது, பலரது கவனத்தையும் பெற்று வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+