Tasmac: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மூடல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள், தனியார் பார்கள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை (அக்டோபர் 4) முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் உத்தரவிட்டுள்ளார். அதேபோல வாக்கு எண்ணிக்கை நாளான அக்.9 அன்றும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வரும் 6 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் 5 முனை போட்டி நிலவுகிறது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் இரண்டு தொகுதிகளிலும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி மாலை 6 மணியுடன் பிரசாரம் நிறைவடையவுள்ளது.

TASMAC Shops Private Bars in Chengalpattu to Remain Closed for 4 Days From Oct 4

அதைத்தொடர்ந்து, அக்டோபர் 6 (செவ்வாய்க்கிழமை) மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் அக். 9 (வெள்ளிக்கிழமை) எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

மதுராந்தகம், தாராபுரம் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு அக்டோபர் 5, 6 ஆகிய இரு நாள்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அக்டோபர் 6 ஆம் தேதி இந்த 2 தொகுதிகளில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இடைத்தேர்தலையொட்டி செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மதுராந்தகம் சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல், வரும் 6 ஆம் தேதி நடைபெறுகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகள், அவற்றை சார்ந்த மதுக்கூடங்கள் மற்றும் மதுபான உரிமம் பெற்ற மதுக்கூடங்கள் அனைத்தும், வரும் 4 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரையும், ஓட்டு எண்ணிக்கை நாளான 9 ஆம் தேதியும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி செயல்படும் டாஸ்மாக் கடைகள், மதுபான கூடங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+