டாஸ்மாக் மதுபான கடைகள் இந்த மாதத்தில் 3 நாட்கள் மூடப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு!
சென்னை: திருவள்ளுவர் தினம், குடியரசு தினம் உட்பட இந்த மாதம் 3 நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை தமிழ்நாட்டில் ஜனவரி 15 ஆம் தேதியில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15ஆம் தேதி பொங்கல், அடுத்த நாள் மாட்டுப்பொங்கல், 17ஆம் தேதி காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், டாஸ்மாக் விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.

இந்த மாதம் மொத்தம் மூன்று நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது. டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் ஜனவரி 16ஆம் தேதி திருவள்ளுவர் தினத்தன்று, டாஸ்மாக் செயல்படாது. அடுத்தபடியாக ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் மற்றும் தைப்பூசத்தன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது. அதேபோல, ஜனவரி 26ஆம் தேதி குடியரசு தினத்தன்று டாஸ்மாக் மதுபானக் கடைகள் செயல்படாது.
தமிழ்நாடு மதுபானம் விதிகள் 1981-ன்படி அனைத்து இந்திய தயாரிப்பு மதுபான கடைகள் (டாஸ்மாக்), அயல்நாட்டு மதுபான கடைகள் (எலைட்) மற்றும் அதனுடன் இணைந்த மதுபான கூடங்கள் (பார்) ஆகியவை 16ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை), 25ஆம் தேதி (வியாழக்கிழமை), 26ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 3 தினங்களில் நாள் முழுவதும் மூடப்பட வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, டாஸ்மாக் கடைகள் விடுமுறை அறிவிப்பை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் பிறப்பித்து வருகின்றனர். அதேபோல் பொங்கலுக்கு டாஸ்மாக் விற்பனை இலக்கு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications