நாளை மறுநாள் தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடல்? ஊழியர்கள் ஸ்ட்ரைக்கால் கடைகள் இயங்காது?
சென்னை: நாளை மறுநாள் (பிப்ரவரி 17 ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 17 ஆம் தேதியில் இருந்து பணிக்கு செல்ல மாட்டோம் என்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1 ஆம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்தை சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.சி. பாட்டாளி, விடுதலை சிறுத்தை உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்திற்கு அரசியல் கட்சி தலைவர்களும் சிலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர். அரசு இதுவரை அழைத்து பேசாததால் அடுத்த கட்டமாக வரும் 17 ஆம் தேதி முதல் காலவரையற்ற கடை அடைப்பு போராட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளனர். போராட்டம் குறித்த நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநருக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாளை (பிப்ரவரி 16 ஆம் தேதி) இரவு 10 மணிக்கு டாஸ்மாக் கடைகளை மூடி சாவியை நிர்வாகத்திடம் கொடுத்து விடுவதாகவும் 17 ஆம் தேதியில் இருந்து பணிக்கு வர மாட்டோம் என்றும் டாஸ்மாக் ஊழியர் சங்க கூட்டமைப்பு சார்பில் தெரிவித்துள்ளனர். இதனால் தமிழகம் முழுவதும் பெரும்பாலான டாஸ்மாக் கடைகள் மூடப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தொழிற்சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், தமிழ்நாட்டில் 4,749 டாஸ்மாக் கடைகள் தற்போது செயல்பட்டு வருகின்றன. இதில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். மிகவும் குறைந்த சம்பளத்தில் 23 ஆண்டுகளாக பணியாற்றி வரும் இவர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது முக்கியமான கோரிக்கை.
14 நாட்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் எங்களை இதுவரை அரசு அழைத்துப் பேசவில்லை. அதனால் பணி புறக்கணிப்பு போராட்டத்தை எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறோம். மேலும் அனைத்து மாவட்டங்களிலும் காலிபாட்டில் ஸ்டிக்கர்களை ஒப்படைக்கவும் முடிவு செய்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்தில் டாஸ்மாக் கடைகளில் பணிபுரியும் மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், உதவியாளர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்பதால் பாதிப்பு ஏற்படக்கூடும். ஆளுங்கட்சியான திமுகவின் தொழிற்சங்கமான தொமுச தொழிலாளர்கள் இதில் பங்கேற்பார்களா என்பது குறித்து இன்னும் அறிவிக்கவில்லை.
தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை தவிர்க்க டாஸ்மாக் நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது, அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படுமா என்பதற்கு விரைவில் விடை கிடைக்கும்.
-
சென்னை மடிப்பாக்கத்தில் பயங்கர தீ விபத்து.. பகலும் இரவானது.. கரும்புகையால் திணறிய மக்கள் - வீடியோ! -
சென்னை கீழ்ப்பாக்கம் ஏடிஎம்மில் கொள்ளை முயற்சி.. அலாரம் அடித்ததும் மர்ம நபர் தப்பி ஓட்டம்! -
கையை மீறி போகும் டாஸ்மாக் விவகாரம்.. நேரடியாக இறங்கிய விஜய்.. ஒரே நேரத்தில் 2 பிரச்சனைகளுக்குத் தீர்வு! -
டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் தனியார்மயமாகிறது? விஜய்யின் மாஸ்டர்பிளான்! கோட்டையில் பரபரப்பு! -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்! -
“என் மகனுக்கு TVK என பெயர் வைக்கப் போகிறேன்” - தவெக எம்.எல்.ஏ பல்லவி அறிவிப்பு -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
மயிலாப்பூர் டூ அம்பத்தூர்.. கார் இருந்தாலும் சைக்கிள் பயணம்! உலக சைக்கிள் தினத்தில் அறிய வேண்டிய கதை -
நாம ஜெயிச்சுட்டோம் மாறா.. கன்னியாகுமரியில் விடிய விடிய போராடி டாஸ்மாக் கடையை மூட வைத்த மக்கள்












Click it and Unblock the Notifications