டாஸ்மாக் கடைகளுக்கு பறந்த அறிவிப்பு.. எத்தனை நாள் மூடப்படுகிறது?.. அதிர்ந்த குடிமகன்கள்
டாஸ்மாக் கடைகளுக்கு 3 தினங்களுக்கு மாவட்ட கலெக்டர்கள் விடுமுறை அறிவித்துள்ளனர்
சென்னை: டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளிவந்ததையடுத்து, குடிமகன்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.
Recommended Video
தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடக்க உள்ளது.. இதற்காக தேர்தல் ஆணையம் தயாராகி வருகிறது.
மொத்தம் 510 பதவிகளுக்கு தேர்தல் நடக்க போகிறது.. வேட்புமனு தாக்கலும் கடந்த 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடந்து முடிந்தது..

கன்ட்ரோல்கள்
தமிழகத்தில் பல்வேறு காலியாக உள்ள இடங்களில் தேர்தல் நடைபெற உள்ளதால், மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது... அந்தவகையில், உள்ளாட்சி இடைத்தேர்தலையொட்டி வாக்குப்பதிவு நடைபெறும் பகுதியில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவித்து உத்தரவிட்டுள்ளது.. இது தொடர்பாக சென்னை, காஞ்சிபுரம், மதுரை, உள்ளிட்ட உள்ளாட்சி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள பகுதிகளின்மாவட்ட கலெக்டர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

3 நாட்கள்
அந்த அறிக்கையில் 3 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.. அதாவது, "கிராமம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும். நாளுக்கு முன்னதாக (நேற்று) 7ம் தேதி காலை 10 மணி முதல் வாக்குப்பதிவு நாளான 9-ந் தேதி நள்ளிரவு 12 மணிவரையிலும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருக்க வேண்டும்.. வாக்கு எண்ணிக்கை நாளான 12-ந் தேதியும் டாஸ்மாக் மூடப்பட்டிருக்க வேண்டும்.வாக்கு பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதியை சுற்றி 5 கி.மீ. சுற்றளவில் அமையப்பெற்றுள்ள அனைத்து டாஸ்மாக் விற்பனைக் கடைகளும் மற்றும் அதனுடன் உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டிருக்க வேண்டும் என உத்தரவிடப்படுகிறது.

பார்கள்
குறிப்பிட்ட காலத்தில் எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது. மேற்படி மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பினை கடைபிடிக்க தவறும்பட்சத்தில் மதுபான விதிமுறைகளின் படி சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது... 3 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால், குடிமகன்கள் அதிர்ந்து போனார்கள்..

கூட்ட நெரிசல்
இதனால், முன்கூட்டியே மதுபானங்களை வாங்கி வைத்து கொள்ள டாஸ்மாக்குகளுக்கு நேற்று முன்தினம் இரவே படையெடுத்தனர்.. சிலர் வாகனங்களை கொண்டு வந்து டாஸ்மாக்குகளின் முன்பு நிறுத்தி, அதில் குவியல் குவியலாக வாங்கி கொண்டு போனார்கள்.. சில டாஸ்மாக் கடைகளில், கூட்ட நெரிசலும் மோதலும் காணப்பட்டது. எந்தவொரு மதுபானத்தையும் விற்பனை செய்யவோ அல்லது வெளியில் கொண்டு செல்லவோ கூடாது என்ற உத்தரவு உள்ளதால், இது தொடர்பான கண்காணிப்பு நடவடிக்கைகளிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

3 நாட்கள் லீவு
அதேபோல, பொள்ளாச்சி, வடக்கிபாளையம் மற்றும் நெ.10 முத்துார் பகுதிகளில், உள்ளாட்சி இடைத்தேர்தலை முன்னிட்டு, 10 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. தேர்தல் நடக்கும் ஓட்டுச்சாவடிகளில் இருந்து, 5 கி.மீ., சுற்றுப்பகுதியில் டாஸ்மாக் கடைகள் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை மற்றும் 12ம் தேதி வடக்கிபாளையம் சுற்றுப்பகுதிகளிலுள்ள, 6 டாஸ்மாக் கடைகள் மற்றும் நெ.10 முத்துாரை சுற்றியுள்ள, 4 டாஸ்மாக் கடைகள் அடைக்கப்படுகின்றன. மேலும் சில மாவட்டங்களில், குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் டாஸ்மாக் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.
-
TASMAC: பாட்டிலுக்கு ரூ.10 கூடுதல் ஏன்? யார் யாருக்கு லஞ்சம் போகிறது தெரியுமா? முழு லிஸ்டடால் ஷாக் -
திருச்சி தனியார் மதுக்கடைகளில் டாஸ்மாக் 10 ரூபாய் ஸ்டிக்கர்? துணை சபாநாயகர் ஆய்வில் ட்விஸ்ட் -
டாஸ்மாக்: பாட்டிலுக்கு ரூ.10 எக்ஸ்ட்ரா! பின்னணியில் இருக்கும் அதிர்ச்சி உண்மைகள்! விஜய் காதுக்கு வந்த செய்தி -
24 மணி நேரம்தான் டைம்! அரசு ஆபீசிலும் காசு தர வேண்டாம்! இறப்புச் சான்றிதழ் பெற ரூட் போட்ட தமிழக அரசு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications