"டாஸ்மாக் கடைகளில் MRP-ஐ மீறி 1 ரூபாய் கூட வாங்க கூடாது.. தவறு செய்தால் டிஸ்மிஸ்”.. அமைச்சர் அதிரடி!
சென்னை: "டாஸ்மாக்கில் எம்.ஆர்.பி விலைக்கு மேல் ஒரு ரூபாய் கூட வசூலிக்கக் கூடாது, கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு ஏற்காது அமைச்சர்தவறு செய்யும் டாஸ்மாக் விற்பனையாளர்கள் பணியில் இருக்க மாட்டார்கள்" என அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம் மேவலூர்குப்பத்தில் உள்ள மதுபான ஆலையில் தமிழ்நாடு அரசின் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் விக்னேஷ் இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பிறகு செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது, டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் கூடுதலாக ரூ.10 வாங்கப்படுவதாக எழுந்து வரும் குற்றச்சாட்டுகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் விக்னேஷ், "இதுபோல் எங்கெல்லாம் கூடுதலாக பணம் வாங்குகிறார்கள் என்று தெரிய வருகிறதோ, அங்கெல்லாம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த பழக்கம் பல வருடங்களாக இருந்துள்ளது. எனவே திடீர் மாற்றத்தை சிலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
ஆனால் மதுபாட்டில்களுக்கு கூடுதலாக பணம் வாங்குவதை தவெக அரசு கடுமையாக எதிர்க்கிறது. நுகர்வோரின் பணம் தனிநபர்களின் கைகளுக்கு போகக்கூடாது என்பதற்காகத்தான் பல மாற்றங்களை கொண்டு வந்துள்ளோம். நானும் சமூக வலைதளங்களில் வரும் வீடியோக்களை பார்க்கிறேன். டாஸ்மாக் கடையில் அதிகமாக பணம் கேட்கிறார்கள் என்று கூறி வீடியோ போடுகிறார்கள்.
இவ்வாறு சமூக வலைதளங்களில் வரக்கூடிய கடைகளுக்கு நீங்கள் அடுத்த நாள் நேரில் சென்று பாருங்கள். தவறான நடைமுறையில் ஈடுபட்ட டாஸ்மாக் விற்பனையாளர்கள் அந்த பணியில் இருக்க மாட்டார்கள். அரசுக்கும், மக்களுக்கும் எது நல்லதோ அதைத்தான் நாங்கள் செய்வோம்.
வியாபார நோக்கத்தில் இந்த துறையை அரசு பார்க்காது. இந்த துறையில் சம்பாதித்து அரசு நடத்த வேண்டும் என்ற எண்ணம் முதலமைச்சர் விஜய்க்கு கிடையாது. அந்த எண்ணம் இருப்பதால்தான் 717 டாஸ்மாக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார்.
மேலும் 717 கடைகள் மூடப்பட்டுவிட்டனவா? மூடப்பட்ட கடைகளின் பட்டியல் எங்கே? என்று சிலர் கேட்கிறார்கள். மூடப்பட்ட கடைகளின் விவரங்கள், அந்த கடைகளின் எண்களோடு ஊடகங்களிலும், சமூக வலைதளங்களிலும் எப்போதோ வெளியாகிவிட்டன. சந்தேகம் இருந்தால் அவற்றை சரிபார்த்துக் கொள்ளலாம்" என்று தெரிவித்துள்ளார்.
-
பனையூரில் மெகா சம்பவம் ரெடி.. முதல்வர் விஜய்யின் பிறந்தநாளில் தவெகவில் இணையும் மாஜி அமைச்சர்கள்! -
“கரண்ட்டே இல்ல.. விவசாயிகளை ஏமாற்றும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் விஜய்” - எடப்பாடி கடும் தாக்கு! -
101 தவெக எம்எல்ஏக்களுக்கு ரூல்ஸ் சொல்லி கொடுக்கணும்..முதல் முறை வென்ற 145 பேருக்கு 2 நாள் பயிற்சி -
விஜயதரணியின் அடுத்த "ஜம்ப்".. விளவங்கோடு டூ தவெக மாஸ்டர் ஸ்கெட்ச்! காங்கிரஸ் எப்படி ஹேண்டில் பண்ணும் -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
திருச்சி, கோவை, சென்னை.. அடியோடு மாறப்போகுது.. விஜய்யின் 5 மாஸ்டர்பிளான்.. டெல்லியில் பேசியது என்ன? -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
"சிங்கப்பெண் ரீல்ஸ் ஒருபக்கம்.. சீரழிக்கும் தவெக கட்சியினர் மறுபக்கம்”.. திமுக சரமாரி அட்டாக்! -
717 டாஸ்மாக் கடைகள் மூடியாச்சா இல்லையா? RTI பதிலால் அதிர்ச்சி.. உடனே பாய்ந்து வந்த பாஜக! -
செல்போனில் பல பெண்களின் ஆபாச வீடியோ.. பெண்களை ஏமாற்றி வீடியோ எடுத்து மிரட்டிய தவெக பிரமுகர் கைது! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்!












Click it and Unblock the Notifications