பாட்டிலுக்கு 10 ரூபா 'இனி இல்லை'.. விஜய் அதிரடி ஆக்ஷன்.. டாஸ்மாக் ஊழியர்கள் திடீர் சஸ்பெண்ட்!

Subscribe to Oneindia Tamil

தமிழகத்தில் டாஸ்மாக் (TASMAC) மதுக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வதாகப் பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து பல்வேறு புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன. இதுத்தொடர்பாக ரிப்போர்ட் கொடுக்க முதல்வர் விஜய் ஏற்கனவே உளவுத்துறைக்கு உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் இணைந்து மாநிலம் முழுவதும் கடந்த மே 28ஆம் தேதி அதிரடியான கூட்டுச் சோதனையை நடத்தின.

Tasmac Vijay TASMAC Staff Suspension Tamil Nadu TASMAC Overcharging CM Vijay TASMAC Crackdown 277 TASMAC Employees Suspended MRP Violation TASMAC Shops Tamil Nadu Liquor Pricing Scam TASMAC Surprise Raids TASMAC Reinstatement Conditions Vijay Government TASMAC Action Illegal Liquor Sales Tamil Nadu 277 MRP

இந்தத் திடீர் சோதனையின் போது, டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட MRP விலையை விட கூடுதலாக ரூ.10 முதல் ரூ.50 வரையிலும், சில இடங்களில் அதற்கு மேலும் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவது கச்சிதமாகக் கண்டறியப்பட்டது.

இந்த மிகப்பெரிய முறைகேட்டின் அடிப்படையில், முதற்கட்டமாக 277 கடைப்பணியாளர்களை டாஸ்மாக் நிர்வாகம் அதிரடியாகப் பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து உத்தரவிட்டுள்ளது.

அதிர்ச்சி கொடுத்த சஸ்பெண்ட் உத்தரவு

இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (TASMAC) தற்பொழுது அதிகாரப்பூர்வமான மிக முக்கியமான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கடந்த மே 28ஆம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய 277 பணியாளர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இவ்வாறு முறைகேடுகளில் ஈடுபட்டு சஸ்பெண்ட் செய்யப்பட்ட பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்துவதற்குத் டாஸ்மாக் நிர்வாகம் தற்பொழுது முன்னெப்போதும் இல்லாத வகையில் மிகக் கடுமையான புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது ஒட்டுமொத்த டாஸ்மாக் வட்டாரத்திலும் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் வேலை வேண்டுமா?

பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் மீண்டும் பணிக்குத் திரும்ப வேண்டும் என்றால், அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை முழுமையாகப் பூர்த்தி செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் கறாராகக் கூறியுள்ளது.

அபராதம் மற்றும் ஜிஎஸ்டி வட்டி: கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்து பிடிபட்ட பணியாளர்கள் தங்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை, அதற்கான சரக்கு மற்றும் சேவை வரி (GST) மற்றும் அதற்குரிய வட்டித்தொகை ஆகியவற்றை முழுமையாக வங்கியில் செலுத்தி, அது செலுத்தப்பட்டதை டாஸ்மாக் நிர்வாகத்திடம் உறுதி செய்ய வேண்டும்.

சம்பள உரிமை ரத்து: சஸ்பெண்ட் செய்யப்பட்டு வேலை செய்யாமல் இருந்த நாட்களுக்குத் டாஸ்மாக் நிர்வாகத்திடம் எந்தவிதமான சம்பளமும் கேட்க மாட்டேன் எனப் பணியாளர்கள் எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக்க வேண்டும்.

காப்புத்தொகை சரிபார்ப்பு: ஊழியர்கள் பணியில் சேரும்போது செலுத்திய காப்புத்தொகை (Caution Deposit) தற்பொழுது முழுமையாக அரசிடம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

பொது கலந்தாய்வு கட்டாயம்: இந்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டாலும், அவர்கள் தங்களுக்குப் பிடித்த இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியை செய்ய முடியாது, பொது கலந்தாய்வு (General Counselling) வாயிலாக மட்டுமே அவர்களுக்கு மீண்டும் பணி நியமனம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

நிரந்தர பணிநீக்க எச்சரிக்கை: மீண்டும் இதேபோன்று கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யும் தவறுகளில் ஈடுபட்டால், எவ்வித விசாரணையும் இன்றி அவர்கள் நிரந்தரமாகப் பணிநீக்கம் (Dismiss) செய்யப் பரிந்துரைக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டு உள்ளது.

அரசின் அதிரடி ஆக்‌ஷன்

தமிழ்நாட்டில் மதுக்குடிப்போர் தங்களது உழைப்பில் ஒரு பகுதியை இந்த மதுபான கொள்முதலுக்குச் செலவிட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில், அரசு நிர்ணயித்த விலையைத் தாண்டி அவர்களின் பாக்கெட்டில் கூடுதலாக பணம் பறிக்கப்படுவதை ஒடுக்கவே இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இனிவரும் நாட்களிலும் இதுபோன்ற கூடுதல் விலை விற்பனை தொடர்பான வேட்டை தொடரும் என்றும், மீறும் ஊழியர்கள் மீது இரக்கமின்றி நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+