தமிழ்நாட்டிற்கு லக் மேல் லக்.. வருகிறது இன்னொரு ஐபோன் தொழிற்சாலை.. சீனாவை கதறவிடும் நம்ம ஊர்!
சென்னை: டாடா குழுமம், Apple Inc. இன் முக்கிய சப்ளையர் நிறுவனமான Pegatron உடன், தமிழ்நாட்டில் இரண்டாவது ஐபோன் உற்பத்திப் பிரிவை அமைப்பதற்காக மேம்பட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது. டாடா குழுமம் மூலம் இதனால் நேரடியாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
விரைவில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டாடா குழுமம், Apple Inc. இன் முக்கிய சப்ளையர் நிறுவனமான Pegatron உடன் இணைந்து இந்த உற்பத்தியை மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது போக டாடா குழுமம் ஓசூரில் உள்ள ஐபோன் கேசிங் யூனிட்டின் தற்போதைய ஆலையை விட இரண்டு மடங்கு அளவுக்கு விரிவுபடுத்த உள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது.
டாடா திட்டம்: 5,000 கோடி ரூபாய் முதலீட்டில் கட்டப்பட்டு 500 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்ட ஓசூர் யூனிட்டில் 15,000 பேர் பணிபுரிகின்றனர், விரிவாக்கத்திற்குப் பிறகு 25,000-28,000 ஊழியர்கள் வரை பணியமர்த்தப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐபோன் அசெம்ப்ளி ஆலையை ஓசூரில் டாடா உருவாக்க உள்ளது. 50,000+ பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் 20 அசெம்பிளி லைன்கள் கொண்ட புதிய தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
டாடா எலெக்ட்ரானிக்ஸ், உயர்தர எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ஆக்சஸெரீஸ் ஒப்பந்த தயாரிப்பில் அதன் திறனை கணிசமாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்த நிறுவனம் சமீபத்தில்தான் விஸ்ட்ரானின் ஐபோன் அசெம்பிளி ஆலையை வாங்கியது. இந்த புதிய ஆலை முற்றிலும் ஆப்பிள் போன் உதிரிபாகங்களுக்கானதாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது,.
டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் தயாரிப்பு ஆலையை விரிவுபடுத்த ஆலைக்கு அருகில் உள்ள நிலத்தை இந்த ஆண்டு மே மாதம் தேடியது. போன் உதிரிபாகங்கள் தயாரிப்பதற்காக ஓசூரில் ஆலையை விரிவுபடுத்த தீவிரமாக முயன்றது. அதற்கான சூழ்நிலை இப்போதுதான் கைகூடி வந்துள்ளது.
ஐபோன் உற்பத்தி:" சமீபத்தில் ஐபோன் 15 இன் நான்கு பதிப்புகளை ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியது - ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ். இந்த மாடல்கள் அனைத்தும் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐபோன் உற்பத்தி மையத்தில் இந்த போன்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.
முதல்முறையாக உலக மார்க்கெட்டில் ஐபோன் கிடைக்கும் அதே நாளில் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் உள்ள மார்கெட்டிலும் போன்கள் கிடைத்துள்ளன. அதேபோல் ஆப்பிள் நிறுவனம் வாட்ச் சீரிஸ் மற்றும் ஏர்போட்ஸ் ப்ரோவை USB-C செயல்பாட்டுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. ஐபோன் முதல்முறையாக USB-C சார்ஜ் டைப்புடன் அமலுக்கு வந்துள்ளது.
ஆப்பிள் போனில் சேர்க்கப்பட்டு இருக்கும் புதிய அம்சங்களைத் அம்சங்கள் மக்கள் இடையே கவனம் ஈர்த்து உள்ளது. அதே போல் உலகின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள பயனர்கள் ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸை வாங்குவதற்காக ஆர்வமாக உள்ளனர். ஏற்கனவே இதை விற்பனை சக்கை போடு போட்டுகொண்டு இருக்கிறது.
ஐபோன் 17 உற்பத்தி: சென்னையில் ஐபோன் 16 உற்பத்தி ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில்தான்
சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறியுள்ளார். சீனாவில் உற்பத்தி தொடங்கும் முன்பாக சென்னையில் இந்த முறை ஐபோன் உற்பத்தி செய்யப்பட உள்ளது.
இதன் மூலம் சர்வதேச ஐபோன் மார்க்கெட்டில் சீனாவை சென்னை முந்தி உள்ளது. சென்னையில் தற்போது சர்வதேச நிறுவனங்கள் முதலீடுகளை அதிகப்படுத்தி வருகிறது. அதிலும் சீனாவில் இருக்கும் நிறுவனங்கள் வேகமாக தமிழகத்தில் முதலீடுகளை பெருக்கி வருகிறது.
பெருகும் முதலீடு: சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்கள் சென்னையில் தனது கிளையை தொடங்க ஆலோசனை செய்து வருகிறது.சென்னை தற்போது உலக அளவில் டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களால் குறி வைக்கப்பட்டு உள்ளது.
தமிழகத்தில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி உள்ள பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழகத்தில் உற்பத்தியை செய்து வருகிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களை அனுப்பி வருகிறது. சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்து உற்பத்தி செய்து வருகிறது.
சென்னையில் இனி அனைத்து search ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படிதான் சென்னையில் ஐபோன் உற்பத்தியாளர்கள் 2024 ஆம் ஆண்டின் இரண்டாம் பாதியில் iPhone 17 ஐ உருவாக்கத் தொடங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. முதல் முறையாக புதிய ஐபோன் தயாரிப்பு சீனாவிற்கு வெளியே தொடங்கும் என்று ஆப்பிள் ஆய்வாளர் மிங் சி குவோ கூறுகிறார்.
ஏற்கனவே சென்னையில் இருக்கும் பாக்ஸ்கான் கிளை, ஆப்பிள் ஐபோன் எக்ஸ் ஆர் வகையை உற்பத்தி செய்தது. ஆனால் மொத்தமாக உற்பத்தி செய்யவில்லை. 80% உற்பத்தி சென்னையில் நடந்தது. அதனால் இதை முழுமையாக மேட் இன் இந்தியா என்று சொல்ல முடியாது. இந்த நிலையில்தான் மொத்தமாக முழுக்க முழுக்க சென்னையிலேயே ஐபோனை தயாரிக்க ஆப்பிள் நிறுவனமும் பாக்ஸ்கான் நிறுவனமும் முடிவு செய்துள்ளது. கடந்த ஐபோன் 15 மாடல் சென்னையில் சீனாவிற்கு பின் உற்பத்தி செய்யப்பட்டது. 16ம் சீனாவில் தொடங்கப்பட்ட பின் சென்னையில் தொடங்கப்பட்டது.
இந்த முறை 17 மாடல் சீனாவிற்கு முன்பாக சென்னையில் தொடங்க முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.
-
சென்னை.. தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய "ஏகே 47.." விசாரணையில், யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு!












Click it and Unblock the Notifications