டிரக் இன்ஜின் உற்பத்தியில் புதிய வரலாறு படைத்தது டாடா.. இனி டர்போட்ரான் 2.0 இன்ஜின்தான் எல்லாமே
சென்னை: டாடா நிறுவனத்தின் புதிய 'டர்போட்ரான் 2.0' இன்ஜின் இந்தியாவின் கடினமான நெடுஞ்சாலைகளில் அதன் திறமையை நிரூபித்திருக்கிறது. குறைவான எரிபொருள் மற்றும் நீடித்து உழைக்கும் திறனுக்காக இந்த இன்ஜின் பல்வேறு விருதுகளை பெற்றிருக்கிறது.
இந்தியாவை பொறுத்த அளவில் சாலை போக்குவரத்து முக்கியமானது. அந்த வகையில் சாலைக்கு ஏற்ற வாகனங்ளை உற்பத்தி செய்வதில் டாடா நிறுவனம் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வருகிறது. இந்நிலையில், தற்போது 'டர்போட்ரான் 2.0' எனும் புதிய வகை இன்ஜினை டாடா அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இன்ஜின் இந்தியாவின் டிரக் வடிவமைப்பில் புதிய மைல்கல்லை எட்டியிருப்பதாக டாடா கூறுகிறது.

இந்த இன்ஜின்களை சிறிய வகை டிரக்குகள் தொடங்கி, கனரக வாகனங்கள் வரை பொருத்தி சோதனை செய்து பார்த்ததில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்திருக்கிறது. அதிகமான டிரக்குகளை வாங்கி இயக்கும் நிறுவனங்களில் ப்ளீட் ஆப்ரேட்டர்கள் இருப்பார்கள். இவர்கள், டிரக்குகளின் தன்மையை நன்கு அறிந்திருப்பார்கள். டாடாவின் 'டர்போட்ரான் 2.0' இன்ஜின் இந்த ப்ளீட் ஆப்ரேட்ர்களுக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது.
'டர்போட்ரான் 2.0' இன்ஜின் குறைவான எரிபொருளுடன், திறமையாக இயங்குவதால் டிரக்குகளுக்கு உறுதி அளித்திருக்கின்றன. டாடா மோட்டார்ஸ் 5.0 லிட்டர் டர்போ டீசல் டர்போட்ரான் 2.0 இன்ஜின், இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் மற்றும் ஏசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் 9 பிரிவில் சாதனை படைத்திருக்கிறது. இதுவே இந்த இன்ஜின் எப்படி வேலை செய்யும் என்பதற்கான நம்பகத்தன்மைக்கு கிடைத்த சிறப்பான அங்கீகாரமாகும்.
புதிய டர்போட்ரான் 2.0 இன்ஜின் மூலம் இயங்கும் 2 டிரக்குகள், மும்பை - சென்னை - கொல்கத்தா - மும்பையில் உள்ள கோல்டன் நாற்கர நெடுஞ்சாலையில், ஒரு மாத காலம் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் குழுவின் தொடர் கண்காணிப்பின் கீழ் இயக்கப்பட்டது. இதில் மற்ற டிரக்குகளை விட இது மேம்பட்டிருக்கிறது கண்டுபிடிக்கப்பட்டது.
அதாவது, வழக்கமாக சாதாரண டிரக்குகள் ஒரு நாளைக்கு 500-600 கி.மீ என மாதத்திற்கு 15,000 முதல் 18,000 கிலோமீட்டர் வரை பயணிக்கின்றன. ஆனால், டர்போட்ரான் 2.0 இன்ஜின் மூலம் இயக்கப்பட்ட டிரக்குகள் ஒரு நாளைக்கு 1000 கி.மீ வரை பயணித்தது. மாதத்திற்கு சுமார் 30,000 கி.மீ-ஐ கடந்தது. இன்ஜின் திறன் மற்றும் எரிபொருள் பயன்பாடு என எல்லாம் சேர்த்து பார்த்தால், மற்ற சாதாரண டிரக்குகளை விட இது 40% வரை லாஜிஸ்டிகல் செயல்திறனை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.
எனவேதான்
30,000 கி.மீ தூரத்தை நடுத்தர டிரக் மூலம் கட்டக உதவும் இன்ஜின்
நடுத்தர டிரக் பிரிவில் தங்க நாற்கர சாலைகளில் வேகமாக பயணிக்க உதவும் இன்ஜின்
நடுத்தர டிரக் பிரிவில் அதிக எரிபொருளை திறன் கொண்ட இன்ஜின்
என இப்படி 9 பிரிவுகளின் கீழ் விருதுகளை டாடாவின் டர்போட்ரான் 2.0 இன்ஜின் பெற்றிருக்கிறது. இந்த இன்ஜின் 5.0 லிட்டர் டர்போசார்ஜ் செய்யப்பட்ட நான்கு சிலிண்டர் கொண்ட டீசல் இன்ஜின் ஆகும். இது இது 180-204 PS மற்றும் 750-850Nm டார்க் அவுட்புட்-ஐ கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் BS6 விதிகளின்படி மாசு உமிழ்வு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.
இந்த இன்ஜின் சிறந்த இயக்கத் திறனை கொண்டிருப்பதால், வெவ்வேறு விதமான எடைகளை சுமந்து செல்லும்போது சிறப்பான செயல்திறனை வௌிப்படுத்துகிறது. அதேபோல ஆயில் மாற்றம் மற்றும், சர்வீஸ்கள் 1 லட்சம் கி.மீக்கு ஒருமுறை செய்தால் போதுமானது என்பதுதான் இந்த இன்ஜினின் தனி சிறப்பு அம்சமாக பார்க்கப்படுகிறது. எனவே பராமரிப்புக்காக குறைவான அளவு செலவு செய்தாலே போதுமானதாகும்.
சுருக்கமாக சொல்வதெனில் 6 ஆண்டுகள்/6 லட்சம் கி.மீ என்கிற உத்தரவாதத்துடன் இந்த இன்ஜின் வெளி வருகிறது. இதற்கு முன்னர் டாடா நிறுவனம் வெளியிட்ட இன்ஜின்களின் நம்பகத்தன்மையை போன்று இந்த இன்ஜினையும் நம்பலாம் என டாடா உறுதியளித்திருக்கிறது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications