வேலையை முடித்த ‘சிறுவாணி’.. 11 மாதத்தில் எல்லைக் கோட்டை தொட்ருச்சு.. முழு வேகத்தில் சென்னை மெட்ரோ!
சென்னை: சென்னை மெட்ரோ ரயில் திட்டம் இரண்டாம் கட்டத்திற்கான பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. "சிறுவாணி" என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம், சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை வரை தோண்டி வந்த மெட்ரோ ரயில் சுரங்கப்பணி நிறைவு பெற்றுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரை, பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை என 2 வழித்தடங்களில் 54 கி.மீ தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் தினமும் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் செய்து வருகின்றனர். மெட்ரோ ரயில் நிர்வாகம் பயணிகளுக்குப் பல்வேறு வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே இருப்பதால் மக்கள் மத்தியில் மெட்ரோ ரயில்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

சென்னை மெட்ரோ 2ஆம் கட்ட பணிகள் தீவிரம்: இந்நிலையில் சென்னையில் தற்போது, 2ஆம் கட்ட மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. இதில், உயர்மட்ட பாதை பணி, தூண்கள் அமைக்கும் பணி கிட்டத்தட்ட முடிவடைந்த நிலையில் கலங்கரை விளக்கம், அடையாறு, சேத்துப்பட்டு, மாதவரம் உள்ளிட்ட இடங்களில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்றது. சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை இடையே சுரங்கம் தோண்டும் பணி முழுவீச்சில் நடந்து வந்தது.
சிறுவாணி, பவானி, பாலாறு: சென்னை மெட்ரோ பணிகளுக்காக சுரங்கம் தோண்டும் இயந்திரங்களுக்கு ஆறுகளின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளன. சேத்துப்பட்டு முதல் ஸ்டெர்லிங் சாலை இடையே சுரங்கம் தோண்டும் இயந்திரத்தின் பெயர் சிறுவாணி. இதேபோல், சேத்துப்பட்டு தெற்கு - ஸ்டெர்லிங் சாலை - பாலாறு, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - பவானி, சேத்துப்பட்டு வடக்கு - கேஎம்சி - தாமிரபரணி என்ற ஆறுகளின் பெயர்களை வைத்துள்ளனர்.
வேலையை முடித்தது சிறுவாணி: இந்நிலையில், சிறுவாணி, தனது பணியை வெற்றிகரமாக முடித்துள்ளது. சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2 வழித்தடம் 3-ல் சிறுவாணி என பெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் வெற்றிகரமாக பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை வந்தடைந்துள்ளது.
இதுகுறித்து, மெட்ரோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கட்டம் I மற்றும் கட்டம் I நீட்டிப்புக்கு பிறகு வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 116.1 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களை கட்டி முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகிறது.
23 இயந்திரங்கள்: அதன்படி, இரண்டாம் கட்ட திட்டத்தில் சுரங்கப்பாதை பணிகளுக்காக மொத்தம் 23 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், இரண்டாம் கட்ட திட்டத்தில் வழித்தடம் 3ல் மாதவரம் பால்பண்ணை முதல் சிறுசேரி சிப்காட் வரை 45.4 கி.மீ. நீளத்திற்கு 28 சுரங்கப்பாதை நிலையங்கள் மற்றும் 19 உயர்மட்ட நிலையங்களுக்கு, ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகாமை, ஆசிய வளர்ச்சி வங்கி, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி மற்றும் புதிய மேம்பாட்டு வங்கி போன்ற பன்னாட்டு நிதியுதவி நிறுவனங்களால் நிதி அளிக்கப்படுகிறது.
வழித்தடம் 3ல் கெல்லீஸ் முதல் தரமணி வரையிலான 12 கி.மீ. நீளத்திற்கு சுரங்கப்பாதை கட்டுமான பணிகள் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு இதற்காக 8 சுரங்கம் தோண்டும் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. சுரங்கம் தோண்டும் இயந்திரம் "சிறுவாணி", வழித்தடம் 3ல் கடந்த ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி சேத்துப்பட்டு நிலையத்திலிருந்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு வரை சுரங்கம் தோண்டும் பணியை தொடங்கியது.
வெற்றிகரமாக வேலை முடிந்தது: 703 மீ நீளமுள்ள சுரங்கப்பாதை பணியை முடித்து ஸ்டெர்லிங் சாலை சந்திப்பு நிலையத்தை நேற்று (ஆகஸ்ட் 5) வந்தடைந்துவிட்டது. இதில் கூவம் ஆற்றின் அடியில் 8.0 மீட்டர் ஆழத்தில் 51 மீட்டர் நீளத்தை வெற்றிகரமாக கடந்து சென்றுள்ளது. சுமார் 11 மாதங்களில் வேலையை வெற்றிகரமாக முடித்துள்ளது சிறுவாணி சுரங்கம் தோண்டும் இயந்திரம்.
இந்நிகழ்வை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் திட்ட இயக்குநர் அர்ச்சுனன், டோனி புர்செல் (அணி தலைவர் - பொது ஆலோசகர்கள்), லத்தீப் கான் (தலைமை தட நிபுணர் - பொது ஆலோசகர்கள்), சஞ்சீவ்குமார் மண்டல் (தலைமை குடியுரிமை பொறியாளர் - பொது ஆலோசகர்கள்), ஜெயராமன் (திட்ட பொறுப்பாளர் - லார்சன் மற்றும் டூப்ரோ) சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள் மற்றும் லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனத்தின் உயர் அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் தளத்தில் இருந்து பார்வையிட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications