சென்னையில் நாளை இண்டர்வியூ.. TCS ஐடி நிறுவனம் தரும் சூப்பர் சான்ஸ்! செம வாய்ப்பு
சென்னை: முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ்ஸில் இருந்து புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான இண்டர்வியூ நாளை (ஜூன் 21) சென்னையில் நடைபெற உள்ளது. தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் இண்டர்வியூவில் பங்கேற்கலாம்.
டிசிஎஸ் ஐடி நிறுவனத்தில் தற்போது வெப் டெவலப்பர் (Web Developer) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு ஏதாவது ஒரு பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும். 10, பிளஸ் 2, டிகிரி என்ற வரிசையில் கல்லூரி படிப்பை முடித்திருக்க வேண்டும். கல்வி மற்றும் பணியில் 2 ஆண்டுக்கு மேலாக இடைவெளி இருக்க கூடாது.

மேலும் சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 4 ஆண்டு முதல் 10 ஆண்டு வரை பணி அனுபவம் கொண்டவர்கள் விண்ணப்பம்செய்யலாம். அவர்களக்கு Webmethods ஸ்கில்ஸ் இருக்க வேண்டும். அதேபோல் சாப்ட்வேர் ஏஜி புராடெக்ஸில் இண்டகிரேஷன் புராஜெக்ட்ஸில் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும்.
இதற்கான இண்டர்வியூ சென்னையில் நாளை (ஜூன் 21) நடைபெற உள்ளது. இண்டர்வியூவில் பங்கேற்க விரும்புவோர் நாளை காலையிலேயே Tata Consultancy Services, Taramani 100 Feet Road, 165/1A New Colony Road, Velachery, Chennai, Tamil Nadu 600042 என்ற முகவரிக்கு செல்ல வேண்டும். இண்டர்வியூவுக்காக பதிவு நாளை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இண்டர்வியூவுக்கு செல்வோர் தங்களின் பணி அனுபவம் தொடர்பான கடிதம், ரிலிவிங் கடிதம் உள்ளிட்டவற்றை வைத்திருக்க வேண்டும். அதேபோல் ரெஸ்யூம், அரசு அடையாள அட்டை, ஒரு பாஸ்போர்ட் சைஸ் போட்டோ வைத்திருக்க வேண்டும். தற்போதைய அறிவிப்பில் பணிக்கான சம்பளம் குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை. இதுபற்றி கடைசி கட்ட இண்டர்வியூவில் தெரிவிக்கப்படும்.
பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்ய Click Here
-
எஸ்பிஐ வங்கியில் வேலை.. டிகிரி முடித்தவர்களுக்கு செம சான்ஸ்.. 7,150 பணியிடங்கள்.. தேதி முடிய போகுது -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications