TCS layoffs: சென்னையில் படுமோசம்.. பணியை விட்டு செல்ல ஐடி ஊழியர்களுக்கு டார்ச்சர்.. TCS மீது பகீர் புகார்
சென்னை: டாடா குழுமத்தை சேர்ந்த டிசிஎஸ் ஐடி நிறுவனம் 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யும் திட்டத்தை ஆகஸ்ட் மாதம் அறிவித்தது. அதன்படி ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க உண்மையில் டிசிஎஸ் நிறுவனம் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேரை பணி நீக்கம் செய்ய முடிவு செய்துள்ளதாகவும், பணியில் இருந்து செல்லும்படி ஊழியர்களுக்கு பல்வேறு டார்ச்சர்கள் கொடுக்கப்படுதாக ஐடி ஊழியர் சங்கம் சார்பில் பரபரப்பான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
தற்போது ஐடி துறையில் ஊழியர்களின் பணி நீக்கம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. டிசிஎஸ், அக்சென்ச்சர், மைக்ரோசாஃப்ட் உள்பட பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை படிப்படியாக பணி நீக்கம் செய்து வருகிறது.

டிசிஎஸ் எனும் டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் எனும் ஐடி நிறுவனம் டாடா குழுமத்தை சேர்ந்தவர். இந்த நிறுவனத்திலும் தற்போது பணி நீக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இதற்கான அறிவிப்பு வெளியானது.
இதுதொடர்பாக டிசிஎஸ் சார்பில், ‛‛சுமார் 12,000 ஊழியர்களை பணி நீக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்கு ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவு அதிகரித்து வருவது தான் காரணம்'' என்று கூறியது. ஆனால் டிசிஎஸ் உண்மையில் 12 ஆயிரம் பணியாளர்களை மட்டும் நீக்கும் திட்டத்தில் இல்லை. சுமார் 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பணியாளர்களை நீக்கும் திட்டத்தில் டிசிஎஸ் உள்ளதாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் ஐடி ஊழியர் சங்கத்தினர் குற்றம்சாட்டி வருகின்றன.
பணி நீக்கம் செய்வதற்காக ஊழியர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். பணியில் இருந்து நிற்கும்படியாக மனஅழுத்தங்கள் கொடுக்கப்படுவதாக திடுக்கிட வைக்கும் பகீர் குற்றசசாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுபற்றி IT மற்றும் ITES ஊழியர் சங்கத்தின் (UNITE) பொதுச் செயலாளர் அலகுநம்பி வெல்கின் கூறுகையில், ‛‛டிசிஎஸ் நிறுவனத்தில் ஊழியர்கள் ராஜினாமா செய்யும்படி கட்டாயப்படுத்தப்படுகின்றன. பணியை விட்டு செல்ல அவர்களுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது.
இல்லாவிட்டால் வழக்கறிஞர்கள் மூலமாக எச்ஆர் பொறுப்பில் உள்ளவர்கள் சம்பளம், பிஎஃப், அலோவன்ஸ் உள்ளிட்டவற்றை நிறுத்தி வைப்பதாக மிரட்டப்படுகின்றனர். சென்னை சிறுசேரியில் உள்ள அலுவலகத்தி்ல ஊழியர்களை தனித்தனியாக பிரித்து வைக்கின்றனர். சகஊழியர்களிடம் இருந்து மற்றவர்களை பிரித்து வருகின்றனர். மனநல மருத்துவர்கள், எச்ஆர் உள்ளிட்டவர்களுக்கு தனித்தனி அறை வழங்கி பணி நீக்கத்தை எதிர்கொள்ளுவோருக்கு ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
மேலும் டிசிஎஸ் நிறுவனம் பணி நீக்கம் செய்யும் ஊழியர்கள் Severance Pay கொடுக்கவில்லை. போராட்டத்துக்கு பிறகு 12 மாதத்துக்கான பணி நீக்க சம்பளத்தை தருவதாக கூறியது. ஆனால் ஊழியர்கள் அனைவருக்கும் இது வேறுப்பட்டு வருகிறது. நான் சுமார் 200 பேரிடம் பேரிடம் பேசிவிட்டேன். பணி நீக்கம் செய்யப்படும் ஊழியர்களுக்கு ஊழியர் இந்த சம்பளம் வேறுப்படுகிறது.
அமெரிக்காவில் தற்போது நிலைமை மோசமாகி உள்ளது. இதனால் பணி நீக்கம் என்பது மார்ச் மாத இறுதியில் 50 ஆயிரத்துக்கும் அதிகமாக இருக்கும். தமிழ்நாட்டில் மட்டும் தினமும் 50 ஊழியர்களை தனியாக அழைத்து எச்ஆர் பேசி வருகின்றனர்'' என்று கூறியுள்ளார். இதுபற்றி சென்னை டிசிஎஸ் டெலிவரி மையத்தில் பணியாற்றி வரும் ஊழியர் கூறுகையில், ‛‛எச்ஆர் அடுத்ததாக யாரை அழைத்து பணி நீக்கம் செய்வார் என்ற பயம் அனைவரிடமும் உள்ளது'' என்று கூறியுள்ளார்.
கர்நாடகா மாநில ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் சுஹாஸ் அடிகா கூறுகையில், ‛‛கர்நாடகாவில் கூடுதல் தொழிலாளர் ஆணையரிடம் டிசிஎஸ் நிறுவனத்துக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அடுத்த விசாரணை அக்டோபர் 15ம் தேதி வருகிறது.
இதுபற்றி புனேவை மையப்படுத்தி செயல்பட்டு வரும் NITES சங்கத்தின் தலைவர் ஹர்பிரித் சிங் சலுஜா சார்பில், ‛‛டிசிஎஸ் நிறுவன பணி நீக்க நடவடிக்கை தொடர்பாக சங்கம் சார்பில் மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்க்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிடும்படி கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டிசிஎஸ் நிறுவனத்தில் 19 ஆண்டுகளாக பணியாற்றிய ஒருவர் கூறுகையில், ‛‛டிசிஸெ் தான் எனக்கு முதல் வேலையாகும். நான் கேம்பஸ் மூலமாக செலக்ட் ஆனேன். குடும்பத்தில் ஏற்பட்ட துயரத்தால் 3 மாதம் விடுப்பு எடுத்தேன். இதையடுத்து ராஜினாமா செய்யும்படி கேட்டனர். அப்போது 3 மாதம் பணி நீக்க ஊதியம் (severance pay) தருவதாக கூறினார்கள். ஆனால் அதனை வழங்கவில்லை. மேலுமு் எனது விடுப்பை பெஞ்ச் டைமாக எச்ஆர் வைத்துள்ளனர். இது சரியில்லை. மேலும் இப்போது வரை எனக்கு ரிலிவிங் கடிதம் மற்றும் செட்டில்மென்ட் எதுவும் தரப்படவில்லை'' என புலம்பி உள்ளார்.
அதேபோல் 13 ஆண்டுகள் பணியாற்றிய இன்னொரு ஊழியர் கூறுகையில், ‛‛எனக்கு 10 மாத பணி நீக்க ஊதியம் வழங்கப்பட்டது. ஆனால் மீடியாக்களில் வந்த செய்தியின் அடிப்படையில் 2 ஆண்டுக்கான பணி நீக்க சம்பளம் வழங்கப்படவில்லை. இன்னும் எனக்கு ரிலிவிங் கடிதம் தரப்படவில்லை'' என்று புலம்பி உள்ளார்.
ஆனால் இந்த குற்றச்சாட்டை டிசிஎஸ் முற்றிலுமாக மறுத்துள்ளது. இதுபற்றி டிசிஎஸ் சார்பில், ‛‛திட்டமிட்டப்படி உலகளவில் 2 சதவீத ஊழியர்களை மட்டுமே பணி நீக்கம் செய்ய உள்ளோம். அதன்படியே பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஊழியர்கள் வேறு கதையை சொல்கின்றனர். இதில் உண்மையில்லை'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
போடியில் ஓபிஎஸ்! ஆலங்குளத்தில் மனோஜ் பாண்டியன்! திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு -
164.. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.. திமுக பட்டியலில் கடைசி பெயராக வந்த முதல்வர் பெயர் -
சட்டமன்ற தேர்தலில் நடிகர் சுந்தர் சி போட்டி.. மதுரை மத்திய தொகுதியில் களம் இறங்குகிறார்.. ஏசி சண்முகம் அறிவிப்பு -
எழும்பூர் டூ பத்மநாபபுரம் வரை.. திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்எல்ஏக்கள்! முழு விவரம் -
அண்ணாமலையை தொட்ட விஜய்! கொங்குவில் ரகசிய வார் ரூம் டீல்? எடப்பாடி பழனிசாமிக்கு காத்திருக்கும் ஷாக்












Click it and Unblock the Notifications