மதுபாட்டிலால் அடித்து.. இளைஞர் மீது கொதிக்கும் வெந்நீரை ஊற்றிய ஆசிரியை.. சென்னையில் ஷாக்
சென்னை: தன்னுடைய வீட்டு வாசலில் குடித்துவிட்டு மதுபாட்டில்களை இவர் தான் போட்டிருப்பார் என்று சந்தேகம் அடைந்த ஆசிரியை, இளைஞரை தாக்கி கொதிக்கும் வெந்நீரை ஊற்றி உள்ளார்.இந்த சம்பவம் சென்னை குரோம்பேட்டை பகுதியில் நடந்துள்ளது. இதையடுத்து இளைஞரை தாக்கிய புகாரில் ஆசிரியை மற்றும் கணவர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குரோம்பேட்டை, ஜமீன் ராயப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் அர்ஜூன் பெயிண்டராக வேலை செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவருடைய பக்கத்து வீட்டில் 30 வயதாகும் மணிகண்டன் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.இவருடய மனைவி ராஜி என்ற ராஜேஸ்வரி (28). இவர் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் மணிகண்டன் வீட்டு வாசலில் அவ்வப்போது மதுபாட்டில்கள் இருந்து வந்ததாம்.இந்நிலையயில் அப்படித்தான் சமீபத்திலும் மதுபாட்டில்கள் இருந்துள்ளது.
இதனை பக்கத்து வீட்டில் வசிக்கும் அர்ஜூன் தான் வீசியிருக்க வேண்டம் என்று சந்தேகப்பட்ட மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும், கடும் கோபம் அடைந்தனர். இதுபற்றி நேரடியாக அவரது வீட்டிற்கே சென்று அர்ஜூனிடம் கேட்டு கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்களாம்.

ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த மணிகண்டன் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் சேர்ந்து கட்டை மற்றும் அங்கிருந்த மது பாட்டில்களால் அர்ஜூனை சரமாரியாக தாக்கி உள்ளார்களாம். இதில் படுகாயம் அடைந்த அர்ஜூன் மயங்கி விழுந்த நிலையில், ஆத்திரம் அடங்காத மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவி இருவரும் கொதிக்கும் வெந்நீரை எடுத்து வந்து அர்ஜூன் மீது ஊற்றினார்களாம்
இதில் மோசமாக படுகாயம் அடைந்த அர்ஜூன், தீக்காயத்திற்கு சிறப்பு சிகிச்சை அளிக்கும் கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி புகாரின் பேரில் சிட்லபாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டன், அவருடைய மனைவி ராஜேஸ்வரி இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications