சென்னையில் தமிழில் பேசியதால் மாணவனை கொடூரமாக தாக்கிய ஆசிரியை.. என்ன நடந்தது?
சென்னை: சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை 5ம் வகுப்பு மாணவன் காதை பிடித்து திருகி உள்ளார். இதில் காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் மாணவர்களை ஆசிரியர்கள் அடிக்கக்கூடாது என்பது உத்தரவாக உள்ளது. அதேநேரம் பள்ளிக்களில் குறும்புத்தனம் செய்யும் மாணவ, மாணவிகளை, கண்டிக்கிறார்கள்.. பள்ளிகளுகக்கு வீட்டுப்பாடம் செய்யாமல் வருவோர், படிக்காமல் வருவோரையும் கண்டிக்கிறார்கள். ஒழுங்கீனமாக நடக்கும் குழந்தையை சில ஆசிரியர்கள் பயமுறுத்தி சரி செய்யும் நோக்கில் அடிக்கவும் செய்கிறார்கள்.

அப்படி அடிக்கும் ஆசிரியர்கள், சில நேரங்களில் வரம்பு மீறி நடந்து கொள்வது விபரீதத்தில் முடிகிறது. அப்படித்தான் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் விபரீதமாக மாறி காவல்துறை வரை சென்றுள்ளார்கள். பள்ளியில் மாணவர்களை கண்டிப்பதற்கு ஆசிரியர்களுக்கு உரிமை உள்ளது என்றாலும், எதற்காக கண்டிக்கிறார்கள் என்பதும் மிக முக்கியமாக பார்க்கிறார்கள் பெற்றோர்கள். ஆசிரியர்கள் தவறான காரணங்களுக்காக கண்டித்தால் அவர்களை தட்டிக்கேட்கவும் செய்கிறார்கள். அப்படித்தான் இங்கும் தட்டிக்கேட்டுள்ளார்கள் பெற்றோர்கள். என்ன நடந்தது என்பதை பார்ப்போம்.
சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் வகுப்பறைக்குள் தமிழில் பேசியதால் 5ம் வகுப்பு மாணவனின் காதை பிடித்துத் திருக்கி உள்ளாராம் பள்ளி ஆசிரியை நாயகி. மாணவனின் காதை ஆசிரியை ஓங்கி திருகியதால், காது சதை கிழிந்து அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார் மாணவர்.
இதனால் மாணவரை மருத்துவமனையில் அனுமதித்த பெற்றோர், பின்னாடியே பள்ளிக்கு சென்று ஆத்திரத்துடன் ஆசிரியையையும் தாக்கி உள்ளனர். அப்போது தான் என்ன நடந்தது என்பது பள்ளியில் உள்ளவர்களுக்கு தெரியவந்துள்ளது. உடனடியாக விரைந்து வந்த ராயபுரம் போலீசார், சம்பவம் குறித்த விசாரித்தனர். விசாரணைக்கு பின்னர் மாணவரின் காதை பிடித்து திருக்கி காயப்படுத்திய ஆசிரியை மீது வழக்கு பதிவு செய்தனர் . தொடர்ந்து ஆசிரியை நாயகியிடம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். தமிழில் பேசியதால் ஆத்திரம் அடைந்த ஆசிரியை காதை பிடித்து திருகி மாணவனை படுகாயப்படுத்திய சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications