கெடு விதித்தும் கலையாத ஆசிரியர்கள்.. “இனி ரத்தமிட்டு சொல்லுவோம்” போராட்டம் தீவிரமாகும் என அறிவிப்பு!
சென்னை: சென்னையில் ஆசிரியர்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஆசிரியர்கள் கலைந்து செல்ல வேண்டும் என போலீசார் காலக்கெடு விதித்தனர். ஆனால், அதைக் கடந்தும் ஆசிரியர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்தப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் இதற்காக போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர். மேலும், ஒருங்கிணைந்த சிறப்பு ஆசிரியர்கள் சங்கத்தினர், டெட் ஆசிரியர்கள் சங்கத்தினரும் டிபிஐ வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னையில் ஆசிரியர்கள் நடத்தி வரும் உண்ணாவிரதப் போராட்டம் 6வது நாளாக தொடர்ந்து வருகிறது. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், போராட்டத்தை கைவிடாமல் உறுதியாக இருந்து வருகின்றனர் ஆசிரியர்கள். உண்ணாவிரதம் தொடர்ந்து வரும் நிலையில், ஆசிரியர்கள் சங்கம், பள்ளிக் கல்வித்துறை உயர் அதிகாரிகள் இடையே இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தன.

மூன்றாம் கட்டமாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது கோரிக்கைகள் தொடர்பாக கட்டாயம் முதல்வரின் கவனத்துக்கு எடுத்து சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாகவும், போராட்டத்தைக் கைவிடும்படியும் அமைச்சர் கூறியுள்ளார். ஆனால், அறிவிப்பு வரும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என ஆசிரியர் சங்கத்தினர் உறுதியாகத் தெரிவித்தனர்.
இந்நிலையில், போராட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என ஆசிரியர்களுடன் திருவல்லிக்கேணி காவல் ஆணையர் சேகர் தேஷ்முக் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு இன்று இரவு 8 மணி வரை கெடு அளிக்கப்பட்டது. தொடர் போராட்டத்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து செல்ல வேண்டும், நீதிமன்றத்தில் தீர்வு காண வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர்.
அப்பகுதியில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். எனினும் தங்களின் கோரிக்கைகள் தொடர்பாக அரசின் சார்பில் முறையான அறிவிப்பு வரும்வரை போராட்டம் தொடரும் என்று ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன. போலீசார் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.

காவல்துறை கெடு விதித்த நேரத்தைக் கடந்தும், ஆசிரியர்கள், தங்களை கைது செய்தாலும் பரவாயில்லை என தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நியமனம் செய்யப்படும் வரை கலைய மாட்டோம், இன்று இரவுக்குள் எங்கள் கோரிக்கை தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும் என டெட் ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசியுள்ள டெட் ஆசிரியர் சங்கத்தினர், "ஏற்கனவே பல முறை போராடியபோதும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தது, ஆனால் செய்யவில்லை. முதல்வர் உறுதி அளித்தால் தான் நாங்கள் இப்போது திரும்பிச் செல்வோம். இல்லையென்றால் போராட்டம் இன்னும் தீவிரமடையும். இதுவரை சத்தமிட்டுச் சொன்னோம், இனியும் கேட்கவில்லையென்றால் ரத்தமிட்டுச் சொல்வோம். எங்கள் வேதனை எங்கள் இடத்தில் இருந்து பார்த்தால் தான் தெரியும்" எனத் தெரிவித்துள்ளனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications