ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை குட் நியூஸ்.. TET தேர்வுக்கு தடையில்லாச் சான்று பெற தேவையில்லை!
சென்னை: 'டெட்' (TET) தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்விதுறை குட் நியூஸ் சொல்லி இருக்கிறது. வரும் நவம்பர் 15, 16 ஆகிய தேதிகளில் டெட் தேர்வு நடைபெறும் நிலையில், டெட் தேர்வு எழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தகுதித் தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. முன்னதாகவே தமிழ்நாட்டில் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான இந்த ஆண்டுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் ஒன்று மற்றும் தாள் இரண்டு எழுதுவதற்கு, ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் செப்டம்பர் 10 ஆம் தேதி வரை https://www.trb.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. தாள் ஒன்றுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 15 ஆம் தேதியும், தாள் இரண்டுக்கான தகுதித்தேர்வு நவம்பர் 16 ஆம் தேதி அன்றும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தேர்வை எழுத 4.80 லட்சம் பேர் வரை விண்ணப்பித்துள்ளனர். உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் காரணமாக தற்போது பணியில் உள்ள ஆசிரியர்களும் இந்த முறை தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். நாடு முழுவதும் பணியில் இருக்கும் ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்ச்சி பெற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதன் காரணமாக கடந்த முறையை விட 17% பேர் அதிகமாக விண்ணப்பித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றத்தின் உத்தரவால் தமிழகத்தில் சுமார் 1.5 லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பாதிக்கப்படும் சூழல் இருக்கிறது. இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை ஆலோசனை மேற்கொண்டது. தொடர்ந்து ஆசிரியர் சங்கங்களின் கருத்துகளும் கேட்டுப் பெறப்பட்டன. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, அரசுப் பணியில் இருப்பவர்கள் உயர்கல்வி அல்லது வேறு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் பங்கேற்க துறைசார்ந்து தடையில்லாச் சான்று பெற வேண்டும். இதனால், டெட் தேர்வுக்கு விண்ணப்பித்த ஆசிரியர்கள் பலர் தேர்வு எழுத அனுமதி கோரி முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்நிலையில், டெட் தேர்வு எழுத ஆசிரியர்கள் தடையில்லாச் சான்று பெற வேண்டிய தேவையில்லை. இந்த தகவலை ஆசிரியர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை சார்பில் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
சிதைந்துபோன மாணவர்கள் நம்பிக்கை.. CBSE விவகாரத்தில் குளறுபடிகள் என்ன? அதிர வைக்கும் ரிப்போர்ட் -
வெறும் 1 மணி நேரம்.. ஒட்டுமொத்த சிபிஎஸ்இ சிஸ்டமும் ஹேக்.. அம்பலப்படுத்திய 19 வயது இளைஞர் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications