3வது நாளாக தொடரும் உண்ணாவிரத போராட்டம்.. அடுத்தடுத்து மயக்கமடைந்த ஆசிரியர்கள்.. சென்னையில் பரபரப்பு!
சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் நேற்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உண்ணாவிரத போராட்டத்தின்போது மயங்கி விழுந்த 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 2009 ஜூன் 1ஆம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8,370 அடிப்படை சம்பளமும், அதற்கு பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 அடிப்படை சம்பளமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஊதிய முரண்பாடு நிலவுகிறது. இதனால் 20 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக் கோரி, இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் 14 ஆண்டுகளாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

அதிமுக ஆட்சியில் ஆசிரியர்கள் இதற்காக போராடியபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து, திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என்றார். திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்பதால் போராட்டத்தை அறிவித்தனர்.
இந்நிலையில், கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி முதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் அறிவித்தனர். இதுதொடர்பாக அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால், ஏற்கெனவே அறிவித்தபடி கடந்த 28-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.
மேலும், மற்ற ஆசிரியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்களும் போராட்டத்தில் பங்கேற்றனர். அன்று இரவு கொட்டும் மழையின்போதும் ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிடவில்லை. தொடர்ந்து 2-வது நாளாக நேற்றும் உண்ணாவிரத போராட்டம் தொடர்ந்தது. அப்போது 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த ஆசிரியர்கள் கீழ்ப்பாக்கம், ராயப்பேட்டை அரசு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில், இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தை அடுத்து தொடக்க கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சங்க நிர்வாகிகளை நேற்று மாலை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். இதையடுத்து, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் மாநில நிர்வாகிகள் அவரது அலுவலகத்துக்கு சென்றனர். கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என நிர்வாகிகள் உறுதியாக கூறியதால் அமைச்சருடன் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்வதாக இயக்குநர் உறுதியளித்தார்.
சென்னை பள்ளிக்கல்வித்துறை அலுவலக வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஆசிரியர்களின் நிலை. ஆட்சியையும் கட்சியையும் பெருமையாக பேசிக் கொண்டிருக்கும் துறைசார்ந்த அமைச்சர் @Anbil_Mahesh பார்வைக்கு... pic.twitter.com/jpjZmUKxEe
— Vignesh Theni (@Vignesh_twitz) September 30, 2023
தொடர்ந்து, ஆசிரியர்களின் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருவதால் டிபிஐ வளாகத்தில், கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஆசிரியர்கள் மயங்கி விழுந்தாலும், தங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அறிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. அரசு உடனடியாக ஆசிரியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கோரிக்கைகள் வலுத்துள்ளன.
-
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம் -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
2010ல் அதிமுக மாவட்ட பொறுப்பில் இருந்தேன்.. எடப்பாடியிடம் ஜனநாயகம் இருக்காம்.. காளியம்மாள் பேட்டி! -
ரஷ்யாவிற்கு சுக்கிர திசை.. அமெரிக்காவே திறந்து விட்ட புதிய வழி.. பல ஆயிரம் கோடி லாபம் கொட்டுகிறது -
தேமுதிகவால் திமுக கூட்டணியில் மற்ற கட்சிகளுக்கு நெருக்கடியா – ஒரே வார்த்தையில் முடித்த பிரேமலதா -
அமைதி வேண்டாம்! எங்களிடம் நீங்க நினைக்காத அஸ்திரம் உள்ளது! அதிர வைத்த புது சுப்ரீம் லீடரின் வார்னிங் -
தேமுதிக தொகுதிகளை குறைக்க திமுக பேச்சுவார்த்தை.. டென்ஷனில் பிரேமலதா விஜயகாந்த்.. ஸ்டாலினின் கேம்!












Click it and Unblock the Notifications