15419 பணியிடங்கள்! ஆசிரியர் கனவு நனவாகப் போகிறது! அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆசிரியர் தேர்வு வாரியம்
சென்னை : தமிழகத்தின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் உள்ள ஆசிரியர் மற்றும் பேராசிரியர் உள்ளிட்ட சுமார் 15,149 காலி பணியிடங்களுக்கான தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டு இருக்கிறது.
தமிழக அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், மற்றும் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், வட்டார கல்வி அலுவலர் உள்ளிட்ட பணியிடங்களை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் பல்வேறு தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது.
ஒவ்வொரு ஆண்டின் இறுதி பகுதியிலும் அடுத்த ஆண்டில் நடத்தப்பட உள்ள தேர்வுகள் குறித்த அட்டவணையை தமிழக ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடுவது வழக்கம்.

ஆசிரியர் தேர்வு வாரியம்
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு நடத்தப்படவுள்ள தேர்வுகள் குறித்த அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி மொத்தம் 15 ஆயிரத்து 149 காலிப்பணியிடங்களுக்காக நடத்தப்படும் ஒன்பது தேர்வுகள் குறித்த அட்டவணை தற்போது வெளியிடப்பட்டிருக்கிறது. முதலாவதாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் ஆசிரியர் பயிற்சி கல்லூரி உதவி பேராசிரியர்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜனவரி மாதம் வெளியிடப்பட இருக்கிறது 4000 பணியிடங்களுக்கான இந்த தேர்வு 2023 ஏப்ரல் மாதத்தில் நடைபெற இருக்கிறது.

தேர்வு அறிவிப்பு
பிளாக் எஜுகேஷனல் ஆபிசர் எனப்படும் வட்டார கல்வி அலுவலர்களுக்கு 23 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு தேர்வானது மே மாதம் நடைபெற இருக்கிறது. 6553 காலிப்பணியிடங்களுக்கான இடைநிலை ஆசிரியர் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும். இதற்கான எழுத்துத் தேர்வு மே மாதம் நடைபெறும்.

பட்டதாரி ஆசிரியர்
3,587 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு வரும் ஏப்ரல் மாதம் வெளியிடப்படும். தேர்வு வரும் ஜுன் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. அரசு பொறியியல் கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பு ஜுன் மாதம் வெளியிடப்படும். இதன்மூலம் , 97 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தேர்வு வரும் செப்டம்பர் மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு
அரசு சட்டக் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் 129 காலி பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு ஜூலை மாதம் வெளியிடப்பட்டு அக்டோபர் மாதத்தில் தேர்வு நடைபெறும் போஸ்ட் கிராஜுவேட் அசிஸ்டன்ட் பணிக்கு 2067 காலி பணியிடங்கள் இருக்கும் நிலையில் ஆகஸ்ட் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டு நவம்பர் மாதம் தேர்வு நடத்தப்பட இருக்கிறது. இதேபோல் ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2, 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறும் என்றும், இத்தேர்வு குறித்த அறிவிப்பு 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியாகும் என்றும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
-
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
"6 மாத இலக்கு நிர்ணயித்த முதல்வர் விஜய்".. நகர்ப்புறங்களில் சுகாதாரம், பசுமைக்கு முக்கியத்துவம் -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்!












Click it and Unblock the Notifications