மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம்.. 4 முக்கிய நிறுவனங்கள் டெண்டரில் ஆர்வம்.. ஆஹா நோட் பண்ணுங்க!
சென்னை: 2025-26ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிவிப்பின்படி, 20 லட்சம் லேப்டாப்-களை கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை தமிழக அரசின் எல்காட் நிறுவனம் கோரியது. இந்த சர்வதேச டெண்டரில் கலந்து கொள்வதற்காக லெனோவா, எச்பி, ஏசர் மற்றும் டெல் உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் பயன்பாட்டுக்காக தமிழக அரசு தரப்பில் இலவச லேப்டாப் திட்டம் 2011ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலமாக லட்சக்கணக்கான மாணவர்கள் பயன் அடைந்தனர். இதன் மூலமாக ஐடி துறை மீதான ஆர்வமும் மாணவர்கள் மத்தியில் அதிகரித்தது.

இலவச லேப்டாப்
ஆனால் 2018ஆம் ஆண்டுக்கு பின் இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்படவில்லை. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட பொருளாதார சிக்கலால், அதிமுக ஆட்சியில் இலவச லேப்டாப் திட்டம் நிறுத்தப்பட்டது. இதனை திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தொடங்க வேண்டும் என்று மாணவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
20 லட்சம் லேப்டாப்
இந்த நிலையில் 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டின் போது மாணவர்களுக்கான இலவச லேப்டாப் திட்டம் குறித்த அறிவிப்பு வெளியாகியது. அடுத்த 2 ஆண்டுகளில் 20 லட்சம் லேப்டாப்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழக அரசு தரப்பில் ரூ.2 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேவையென்றால் கூடுதல் நிதியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறி இருந்தார்.
ரூ.20 ஆயிரம் மதிப்பு
அதுமட்டுமல்லாமல் ஒரு லேப்டாப் மதிப்பு எவ்வளவாக இருக்கும் என்று அதிமுக தரப்பில் கேட்கப்பட்ட போது, ரூ.20 ஆயிரம் மதிப்பில் 20 லட்சம் லேப்டாப்களை கொள்முதல் செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தங்கம் தென்னரசு பதில் அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தொடர்ந்து 20 லட்சம் லேப்டாப் கொள்முதல் செய்வதற்கான சர்வதேச டெண்டரை எல்காட் நிறுவனம் வெளியிட்டது.
எப்படி இருக்கும் லேப்டாப்?
அதேபோல் இலவச லேப்டாப் 8 ஜிபி ரேம், 256 ஜிபி ஹார்ட் டிஸ்க், 14 அல்லது 15.6 இன்ச் திரை, ப்ளூடூத் 5.0, 5 மணி நேரம் வரை தாங்கும் 4 அல்லது 6 செல் லித்தியன் அயன் பேட்டரி, லேப்டாப்பின் முன்புறம் 720p ஹெச்டி கேமரா, விண்டோஸ் 11 உள்ளிட்ட செயல்திறன் கொண்டதாக வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. லேப்டாப்களுக்கு 1 ஆண்டு வாரண்டி மற்றும் சர்வீஸ் செண்டர் உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சர்வீஸ் சென்டர்
கடந்த முறை அளிக்கப்பட்ட லேப்டாப்களை தனியார் சர்வீஸ் செண்டர்களில் மாணவர்கள் கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அதனை களையும் வகையில் டெண்டரின் போதே லேப்டாப் சர்வீஸ் மற்றும் வாரண்டி தேவை என்பதிலும் தமிழக அரசு கவனமாக உள்ளது. இந்த நிலையில் பன்னாட்டு லேப்டாப் டெண்டரில் கலந்து கொள்வதற்காக ஏராளமான நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருவதாக தெரிய வந்துள்ளது.
4 நிறுவனங்கள் ஆர்வம்
பன்னாட்டு நிறுவனங்களான டெல், ஏசர், லெனோவா, எச்பி உள்ளிட்ட நிறுவனங்கள் கலந்து கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. சந்தையில் இந்த நிறுவனங்களின் லேப்டாப் அதிகபட்ச விலையில் தரமானதாக இருந்து வரும் நிலையில், டெண்டர் பணிகள் ஜூலை 9ஆம் தேதி இறுதி செய்யப்பட உள்ளது. இதன்பின் விரைவில் மாணவர்களுக்கு லேப்டாப் அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications