சந்திரயான் 3ஐ உருவாக்க வேலை பார்த்த டெக்னீஷியன்.. இட்லி விற்கும் அவலம்.. கலங்கடித்த விஞ்ஞானியின் கதை
சென்னை: இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சந்திரயான் 3 நிலவில் ஆராய்ச்சிகளை செய்து முடித்துள்ளது. இந்த ஆராய்ச்சியில் பல்வேறு சுவாரசியமான தகவல்கள் கிடைத்து வருகின்றன. சந்திரயான் 3ன் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவர் இரண்டும் தற்போது நிலவில் உள்ளது. இதில் பிரக்யான் ரோவர் 14 நாட்கள் முடிந்து தூக்க நிலைக்கு சென்றுவிட்டது.

14 நாட்களுக்கு பிறகு மீண்டும் தென் துருவத்தில் சூரியன் வந்ததும் அது இயங்குமா என்ற கேள்வி உள்ளது. அதில் தற்போது முழு சார்ஜ் உள்ளது. இதனால் 14 நாட்களுக்கு பின் அதை இயங்க வைக்கும் பணிகள் நடக்கும். இன்னொரு பக்கம் இதில் விக்ரம் லேண்டர் தரையிறங்கிய இடத்தில் இருந்தே ஆய்வு செய்து கொண்டு இருந்த நிலையில் அதுவும் தூக்க நிலைக்கு இரண்டு நாட்களுக்கு முன் சென்றுவிட்டது. 14 நாட்களாக பிரக்யான் ரோவர் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நிலவில் ஆய்வுகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில்தான் அங்கு சூரியன் அஸ்தமனம் ஆனதால் தற்போது இரண்டையும் தூக்க நிலைக்கு கொண்டு சென்றுள்ளன. சந்திரயான் 3 வெற்றி இஸ்ரோவிற்கு மட்டுமின்றி மொத்த நாட்டிற்கும் பெருமை தேடிக்கொடுத்து உள்ளது.
இந்த நிலையில், இஸ்ரோவின் சந்திரயான்-3 ஏவுதளத்தை உருவாக்குவதில் பணிபுரியும் ஹெச்இசி (ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்) தொழில்நுட்ப வல்லுநரான தீபக் குமார் உப்ராரியா, ராஞ்சியில் உள்ள சாலையோரக் கடையில் இட்லிகளை விற்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தினசரி வாழ்க்கையை நடத்துவதற்கே இவருக்கு போதிய வருமானம் இல்லாத காரணத்தால் இவர் இட்லி விற்கும் நிலைக்கு வந்ததாக கூறப்படுகிறது.
ராஞ்சியில் உள்ள துர்வா பகுதியில் பழைய சட்டப் பேரவைக்கு எதிரே உப்ராரியா கடை வைத்துள்ளார். சந்திரயான் -3 க்கு ஏவுகணை மேடை மற்றும் கதவுகளை உருவாக்கிய ஹெச்இசி நிறுவனத்தில் வேலை பார்த்த இவர் இட்லி கடையை திறந்துள்ளார்.. 18 மாதங்களாக தனது சம்பளத்தை செலுத்தாததால் அவர் தனது சாலையோர கடையைத் திறந்தார்.
HEC இன் சுமார் 2,800 ஊழியர்கள் கடந்த 18 மாதங்களாக சம்பளம் பெறவில்லை என்று கூறுகின்றனர். அவர்களில் உப்ராரியாவும் ஒருவர். பலர் வேலையை விட்டுவிட்டு வேறு வேறு வேலைகளுக்கு சென்ற நிலையில்தான் இவர் இட்லி விற்க சென்றுள்ளார்.
உப்ராரியா இது குறித்து ஊடகங்களுக்கு அளித்துள்ள பேட்டியில், கடந்த சில நாட்களாக இட்லிகளை விற்று வருகிறேன். வேலையில் வருமானம் இல்லாததால் இந்த கடையை திறந்தேன். நான் இன்னும் வேலையை விடவில்லை. அந்த வேலையை பார்த்துக்கொண்டே இட்லி விற்றுவருகிறேன். நான் காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறேன். மாலையில், வீட்டிற்குத் திரும்புவதற்கு முன்பு மீண்டும் இட்லி விற்று வாழ்க்கை நடத்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், முதலில் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்தேன். 2 லட்சம் கடன் வாங்கினேன். நான் கடனை திருப்பி செலுத்தாதவனாக வங்கி மூலம் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு வீட்டை நடத்த ஆரம்பித்தேன்.இதுவரை நான்கு லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளேன். நான் யாரிடமும் பணத்தை திருப்பித் தராததால், தற்போது உறவினர்கள் கடன் கொடுப்பதை நிறுத்திவிட்டனர். பிறகு மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நடத்தினேன்.
தற்போது இட்லி விற்கிறேன். என் மனைவி நல்ல இட்லி செய்வார். அதை விற்று தினமும் 300 முதல் 400 ரூபாய் கிடைக்கும். இதில் 50-100 ரூபாய் லாபம். இந்தப் பணத்தில் வீட்டை நடத்துகிறேன். இப்படித்தான் எங்கள் வாழ்க்கை ஓடுகிறது என்று அவர் பேட்டி அளித்துள்ளார்.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications