கைகள் சேர்த்து துப்பட்டாவால் கட்டப்பட்ட நிலையில் சிறுவன் சிறுமி சடலம்.. காதல் விவகாரத்தால் தற்கொலை!
சென்னை: திருவொற்றியூர் கடல் பகுதியில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் தங்கள் கைகளை இணைத்து துப்பட்டாவால் கட்டிக்கொண்டு, கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த திருவொற்றியூர் அருகே கடல் பகுதியில் 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி இருவரும் துப்பட்டாவால் கைகளை கட்டிக்கொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியதில், சென்னை மாதவரம் பால் பண்ணை பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 16 வயது சிறுமி திருவொற்றியூர் கடற்பகுதியில் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது.
இருவரும் ஒரே டியூஷனில் படித்து வந்தபோது பழக்கம் ஏற்பட்டு இருவரும் 7 மாதங்களாக காதலித்து வந்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இருவரும் தங்கள் கைகளை இணைத்து துப்பட்டாவால் கட்டிக்கொண்டு கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை அருகே பள்ளியில் படித்து வந்த சிறுவனும், சிறுமியும் கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications