அப்பல்லோவுக்கு போன் போட்ட தமிழிசை.. ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி விசாரிப்பு! 'விஷ்' செய்த பவன் கல்யாண்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.

அண்ணாத்த திரைப்பட சூட்டிங் காக ஹைதராபாத் சென்றிருந்தார் ரஜினிகாந்த். இந்த படப்பிடிப்பு குழுவில் உள்ள பலருக்கும் கொரோனா நோய்த்தொற்று ஏற்பட்ட நிலையில் ரஜினிகாந்த் கடந்த சில நாட்களாக தன்னை தனிமைப்படுத்தி இருந்தார்.

Recommended Video

    நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

    ஆனால் திடீரென ரத்த அழுத்தத்தில் ஏற்றத்தாழ்வுகள் மிகுதியாக ஏற்பட்டதன் காரணமாக ஹைதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

    அப்பல்லோ தகவல்

    அப்பல்லோ தகவல்

    ரத்த அழுத்தத்தில் மாறுபாடு இருப்பதாகவும், சோர்வாக காணப்படுவதாகவும் மருத்துவமனை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற உடல் நலம் சார்ந்த எந்த ஒரு பிரச்சினைக்கும் ரஜினிகாந்த் இல்லை என்றும் அப்பல்லோ மருத்துவமனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா பரிசோதனை

    கொரோனா பரிசோதனை

    ஏற்கனவே ஒரு முறை கொரோனா பரிசோதனை செய்து வந்திருந்தாலும் கூட, திரும்ப கொரோனா பரிசோதனையை நடத்த வேண்டும் என்று மருத்துவமனை நிர்வாகம் திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் தெலுங்கானா ஆளுநராக செயல்பட்டு வருபவரும், தமிழக முன்னாள் பாஜக தலைவருமான தமிழிசை சௌந்தரராஜன் அப்பல்லோ மருத்துவமனைக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி கேட்டறிந்து உள்ளார்.

    போன் போட்ட தமிழிசை

    போன் போட்ட தமிழிசை

    இது தொடர்பாக ஆங்கிலம் மற்றும் தமிழில் தமிழிசை சௌந்தரராஜன் டுவிட் செய்துள்ளார். ஹைதராபாத் அப்போலோ மருத்துவமனையை தொடர்பு கொண்டு சகோதரர் ரஜினிகாந்த் அவர்களின் உடல்நிலை குறித்து விசாரித்தேன். அவர் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று விரும்புகிறேன். பிரார்த் திக்கிறேன். இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். தமிழிசை சௌந்தரராஜன் ஒரு மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    பவன் கல்யாண்

    பவன் கல்யாண்

    முன்னதாக பவன்கல்யாண் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கு திரையுலகை சேர்ந்த பிரமுகர்களும் ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி கேட்டறிந்து உள்ளனர் இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்திலும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என்று பவன் கல்யாண் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் பவன் கல்யாண் கூறுகையில், பிரபல நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல்நலக் குறைவால் ஹைதராபாத் தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தியை அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்தேன்.

    இறைவன் ஆசீர்வாதம்

    இறைவன் ஆசீர்வாதம்

    அவருக்கு கொரோனா அறிகுறிகள் இல்லை என்று மருத்துவர்கள் அறிவித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ரஜினிகாந்த் அவர்கள் நிறைந்த தைரியமுள்ளவர், அது மட்டுமல்லாது ஆன்மீகம் உள்ளவர். கடவுளின் ஆசிர்வாதங்களை பெற்று விரைவில் குணமடைவார். அவர் வணங்கும் மாகாவதார் பாபாஜியின் ஆசீர்வாதங்களை பெற்று அவர் முழுமையான ஆரோக்கியத்துடன் நம் முன் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+