மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் வாழ்க்கை -உற்சாக மூட்டிய ஆளுநர் தமிழிசை
Recommended Video
சென்னை: பெண்கள் தோல்விகளை கண்டு துவண்டு விடக்கூடாது என்றும், துணிச்சலாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ்வதற்கே வாழ்க்கை எனவும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பாரதி விழாவில் பேசும் போது இதனைக் கூறினார்.
பாரதியார் அளவுக்கு வேறு யாரும் பெண்மையை போற்றியும், பெண்ணை உயர்த்தியும் கவிதை வடித்திருக்க முடியாது எனத் தெரிவித்தார்.

புகழாரம்
பெண்ணை சக்ரவர்த்தியாக சித்தரித்து ''சக்கரவர்த்தினி'' என்ற மிகப்பெரிய பட்டத்தை சூட்டியவர் பாரதியார் என புகழாரம் சூடினார். வாழ்க்கையில் எதிர்மறை விளைவுகளை கண்டு அஞ்சி ஓடாமல், அதிலிருந்து நல்ல பாடங்களை எடுத்துக்கொள்ள வேண்டும் எனப் பேசினார். மேலும், சமுதாயத்தில் எல்லா பெண்களும் நல்ல நிலையில் உள்ளார்கள் எனக் கூறமுடியாது என்றும், இன்றும் பலர் முன்னேறமுடியாத சூழலில் இருக்கிறார்கள் என வேதனைத் தெரிவித்தார்.

கனவு மெய்ப்படும்
பெண்கள் தம்மை அடக்குபவர்களை தலைநிமிர்ந்து எதிர்க்கத்துணிய வேண்டும் எனப் பேசிய ஆளுநர் தமிழிசை, பெண்களை இரும்புபிடி போல் பலர் சித்தரிப்பதாக தெரிவித்தார். பாரதியாரின் வரிகளை நினைவுகூர்ந்து, வீழ்வேன் என நினைக்காமல் எழுவேன் என நினைத்து பெண்கள் செயல்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அவர், அப்போது தான் கனவு மெய்படும் எனக்கூறினார்.

பாரதி வரிகள்
சிறிய தோல்விகளுக்காகவும், கவலைக்களுக்காகவும் பெண்கள் தற்கொலை முடிவை எடுக்கக்கூடாது என வேண்டுகோள் விடுத்த ஆளுநர் தமிழிசை, துணிச்சலாக எதையும் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் எனத் தெரிவித்தார். மேலும், வாழ்க்கை என்பது மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தான் என்றும், பாரதியாரின் பாடல் வரிகளின் படி பெண்கள் உறுதுபூண்டு துணிச்சலாக இருக்க வேண்டும் எனப் பேசினார்.

தன்னம்பிக்கை
தெலுங்கானா ஆளுநராகிய பின்பு தமிழகத்தில் தமிழிசை சவுந்தரராஜன் பங்கேற்ற முதல் கூட்டம் என்பதால் அவர் என்ன பேசுவார், எதைப்பற்றி பேசுவார் என செய்தியாளர்கள் மத்தியில் ஆவல் ஏற்பட்டது. ஆனால் அவர் முழுக்க முழுக்க பாரதியாரின் பெருமைகளையும், பெண்களுக்கு தன்னம்பிக்கை அளிக்கும் வகையிலும் தனது உரையை நிகழ்த்தினார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications