தடதடக்கும் ஹைதராபாத்.. தெலுங்கானாவின் கிரண்பேடி ஆவாரா தமிழிசை.. டென்ஷனில் கேசிஆர்!
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனின் அடுத்த சர்ச்சை வெடித்துள்ளது
Recommended Video
சென்னை: என்னது... இன்னொரு கிரண்பேடியா.. நாடு தாங்காது என்கிறார்கள் காங்கிரசார்... போற போக்கை பார்த்தால், ஆளுநர் தமிழிசை "தெலுங்கானாவின் கிரண்பேடி" ஆகவிடுவார் போல இருக்கிறது.
தமிழிசைக்கு ஆளுநர் பதவி என்பது கவுரவ பதவியாக கருதப்பட்டாலும், உண்மையில் பாஜகவின் நோக்கம் வேறு மாதிரியாகதான் உள்ளது.
தெலுங்கானா சட்டசபைக்கு, 2023-ல் தேர்தல் நடக்க உள்ளது. இதில் ஆட்சியை பிடிக்க தீவிர திட்டமிட்டுள்ளதாகவும், இதன் ஒரு பகுதியே தமிழிசை நியமனம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

சர்ச்சை
தெலுங்கானாவில் தாமரையே மலர போவதில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு பாஜக தலைமை வந்துவிட்டதால்தான் பொறுமை, அனுபவம் வாய்ந்த தமிழிசையை அங்கு நியமித்துள்ளதாகவும் சொல்கிறார்கள். அதன்படியே, அதற்கான வேலைகளையும் துவங்கிவிட்டார் தமிழிசை. பதவி ஏற்ற ஒரு வாரத்திலேயே சர்ச்சையில் சிக்கியவர்.. இன்னமும் ட்விட்டரில் மாட்டிக் கொண்டு விழித்து வருகிறார் தமிழிசை.

கேசிஆர்
இப்போது புதிதாக ஒரு விஷயம் முளைத்துள்ளது. தெலுங்கானா மக்களை நேரிடியாக சந்தித்து குறைகளை கேட்க போவதாக அறிவித்துள்ளார் தமிழிசை. இதை கேட்டதுமே, சந்திர சேகர ராவ் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்றியதை போல ஆகிவிட்டது. ஏனெனில் பொதுவாக, மாநில ஆளுநர்கள் என்பவர்கள், ஆட்சி தொடர்பான வெளி நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ அல்லது மக்களை சந்தித்து குறைகளை கேட்பதோ நடைமுறையில் கிடையாது.

பன்வாரிலால்
இதற்கு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பித்து வைத்தவர்கள், நம்ம ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடியும்தான். அதனால்தான் இவர்கள் 2 பேருமே இன்று வரை சர்ச்சையில் சிக்கி வருகிறார்கள். அதிலும் கிரண்பேடியோ ரொம்பவே ஓவர் என்கிறது அம்மாநில முதல்வர் தரப்பு!

சர்ச்சை
மஜ்லிஸ் பச்சோ தெக்ரிக் அமைப்பின் தலைவர், "நீங்கள் வாரம் ஒரு தடவை மக்களை சந்தித்து குறைகளை கேட்க வேண்டும்' என்று தமிழிசையிடம் ட்விட்டரில் கேள்வி எழுப்ப.. அதற்கு தமிழிசையோ, ஆமாம்.. எனக்கும் இப்படி எண்ணம் இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார். இதுதான் சர்ச்சையாகி உள்ளது. ஆளுநரின் அதிகாரித்தை மீறும் செயல் என்றும், தெலுங்கானாவில் பாஜகவை வளர்ப்பதற்காக மாநில அரசுக்கு இணையாக மற்றொரு அரசை நீங்கள் நடத்தப்போகிறீர்களா? என்றும் பலர் தமிழிசையை கேள்வி மேல் கேட்டு வருகின்றனர்.

கிரண்பேடி
பதவியேற்றது முதலே, சனி, ஞாயிறு ஆகிவிட்டால் கிரண்பேடி இப்படித்தான் மக்களை சந்தித்து வருகிறார். விவசாயம், நீர்நிலைகள், கிராமபகுதிகள் என ஒரு இடம் விடாமல் மக்களை நேரடியாக சந்தித்து, ஆய்வுபணிகளை மேற்கொள்கிறார். அப்போது மக்களிடம் கிரண்பேடி பேசும் விதமே அலாதியானது. அந்த மக்களிடம் நெருக்கத்தை அதிகப்படுத்தி கொள்வதுடன், தூய்மை பணியின் அவசியத்தை விடாப்பிடியாக இன்றுவரை தொடர்ந்து செய்து வருகிறார்.

அரசியல்?
மக்கள் பார்வையில் ஒருவகையில் இது நல்லது என்றாலும், ஆளுநருக்கான அதிகார வரைமுறை என்று வரும்போது, இவை சலசலக்கப்படுகிறது. அதேபோலதான் தமிழிசைக்கும் ஏற்படும் போல தெரிகிறது. அப்படி மக்களை சந்தித்து குறை தீர்க்கும் பணியில் தமிழிசை இறங்குவார் என்றால் நிச்சயம் கிரண்பேடியை விட சிறப்பாகவே தமிழிசையால் செய்ய முடியும். காரணம், தமிழிசைக்கு அடிப்படையிலேயே நல்ல மனசு உள்ளவர். ஆனால் மக்களை சந்தித்து குறை கேட்பது, அரசியலாக்கப்படுமா? அல்லது வரவேற்பை பெறுமா என்றுதான் பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications