வெளிநாட்டில் இருந்து சிலைகள் மீட்பு..டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்த சிவன்,விஷ்ணு, நடராஜர்
தஞ்சை, நெல்லை, அரியலூர் கோயில்களில் திருடப்பட்ட சாமி சிலைகள் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
சென்னை: வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்ட 10 சாமி சிலைகள் டெல்லியிலிருந்து, ரயிலில் சென்னை வந்தன. துவாரபாலகர், நடராஜர், சிவன்- பார்வதி, குழந்தை பருவ சம்பந்தர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் சென்னை வந்தடைந்துள்ளது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான பழமையான கோவில்களில் கலை நயம்மிக்க நேர்த்தியான பழமையான விலை மதிப்பற்ற கற்சிலைகளும், உலோகச் சிலைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன. கடந்த காலங்களில் தமிழக கோவில்களிலிருந்து விலை மதிப்பற்ற சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு அங்குள்ள அருங்காட்சியகங்கள் மற்றும் கலைப் பொருள் வியாபாரிகளுக்கும் சட்டத்திற்கு புறம்பாக விற்கப்பட்டன.
இதுகுறித்து குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அவை சிலை தடுப்பு பிரிவினரால் புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அத்தகைய சிலைகள் அங்குள்ள அருங்காட்சியகங்களிலும் கலைப் பொருள் சேகரிப்பாளர்களிடமும் காணக் கிடைக்கின்றன. தமிழக கோயில்களிலிருந்து கடந்த காலங்களில் திருடப்பட்ட சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சி தொடர்ந்து நடந்து வருகிறது.

சாமி சிலைகள் மீட்பு
மாயமான சிலைகளை வெளிநாடுகளில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை போலீசார் எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினும், டிஜிபி சைலேந்திரபாபுவுக்கு உத்தரவிட்டார். முதல்வரின் இந்த உத்தரவையடுத்து, திருடுபோன சிலைகளை மீட்பதற்காகவே தனிப்படை அமைக்கப்பட்டது... அப்போதுதான், நம் கோயில்களில் இருந்து திருடுபோன பல சிலைகள், வெளிநாடுகளில் உள்ள அருங்காட்சியகங்களிலும், கலைப்பொருள் சேகரிப்பாளர்களிடமும் இருப்பது தெரியவந்தது... உடனே, இந்த சிலைகள் எல்லாம் நம்முடைய கோவில்களில் இருந்து திருடப்பட்டவைதான் என்பதை நிரூபிக்க சாட்சியங்கள், தடயங்கள் சேகரிக்கப்பட்டன.. அவை எல்லாமே சட்டப்படியான ஆதாரங்கள் ஆகும்.

திருடப்பட்ட சிலைகள்
இந்த ஆதாரங்களை தமிழக அரசு மூலம், நம் சிலைகள் உள்ள அந்தந்த நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இறுதியில், அந்த சிலைகள் எல்லாம், தமிழக கோவில்களில் இருந்து திருடப்பட்டவை என்பது நிரூபிக்கப்பட்டது. அதன்பிறகு, அந்த சிலைகளை, அந்தந்த நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு மீட்டு வர நடவடிக்கையும் எடுக்கப்பட்டது. தமிழக கோவில்களில் இருந்து 10 சிலைகள் திருடப்பட்டுள்ளன. விலைமதிப்பற்ற அந்த சிலைகள் உலோகம் மற்றும் கற்சிலைகள் ஆகும்.

10 சிலைகள் மீட்பு
அந்த வகையில் சமீபத்தில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளின் அருங்காட்சியகங்களிலிருந்து மீட்கப்பட்ட 10 சிலைகள் டெல்லியில் உள்ள இந்தியத் தொல்பொருள் துறையினர் வசம் ஒப்படைக்கப்பட்டன.
இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து மீட்கப்பட்டு ஒப்படைக்கப்பட்ட 10 சாமி சிலைகள் டெல்லியிலிருந்து, ரயிலில் சென்னை வந்தன. துவாரபாலகர், நடராஜர், சிவன்- பார்வதி, குழந்தை பருவ சம்பந்தர், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள் சென்னை வந்தடைந்துள்ளது.

எந்தெந்த கோவில் சிலைகள்
அதில் 2 துவாரபாலன் சிலைகள் தென்காசி மாவட்டம் அத்தானநல்லூர் மூன்றீஸ்வரமுடையார் கோவிலை சேர்ந்தவை.. நடராஜர் சிலையானது, தஞ்சை மாவட்டம் புன்னைநல்லூர் கைலாசநாதர் கோவிலையும், கங்காளமூர்த்தி, நரசிங்கநாதர் சிலைகள் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி நரசிங்கநாதர் கோவிலையும், விஷ்ணு, ஸ்ரீதேவி சிலைகள், அரியலூர் மாவட்டம் சுத்தமல்லி கிராமம் வரதராஜபெருமாள் கோவிலையும், சிவன்-பார்வதி சிலை, தஞ்சை மாவட்டம் தீபாம்பாள்புரம் வான்மீகிநாதர் கோவிலையும், குழந்தை சம்பந்தர் சிலை நாகை மாவட்டம் சாயவனேஸ்வரர் கோவிலையும் சேர்ந்தவையாகும். ஆனால், நடனமாடும் குழந்தை சம்பந்தர் சிலை மட்டும் எந்த கோவிலை சேர்ந்தது என்று தெரியவில்லையாம்.

டிஜிபி சைலேந்திரபாபு
அந்த 10 சிலைகளையும், தமிழக அரசிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடைபெற்றது. மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷண்ரெட்டி, தமிழக போலீஸ் டிஜிபி சைலேந்திரபாபுவிடம் அந்த சிலைகளை ஒப்படைத்தார். அப்போது மத்திய அமைச்சர் எல்.முருகன், காவல்துறை இயக்குநர் ஜெயந்த் முரளி மற்றும் சிலை தடுப்பு பிரிவு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

சென்னை வந்த சிலைகள்
பத்து சாமி சிலைகளும் டெல்லியில் இருந்து ரயில்கள் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன. அதன்பிறகு, கும்பகோணம் சிறப்பு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்... இறுதியில், சம்பந்தப்பட்ட கோவில்களில் சிலைகள் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.
-
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி












Click it and Unblock the Notifications