இப்படி ஒரு அரசியலை தமிழகம் கண்டதில்லை.. தலைவர்களுக்கு "தலைக்கு மேல்" பிரச்சினை.. போட்டோ பாலிடிக்ஸ்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் புதுமையான ஒரு பிரச்சினையை கையாண்டு வருகிறது. தலைக்கு மேல், யார் முடிக்கு, டை அடித்து இருக்கிறார்கள் என்று காரசார விவாதம் களைகட்டி வருகிறது. இது தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை அதிகரித்து வருகின்றன. ஆனால் தலை முடி பற்றி ஏன் இவ்வளவு பஞ்சாயத்து என்று தலையில் அடித்துக்கொள்வோரையும் பார்க்க முடிகிறது. அது என்ன விஷயம்.. இதோ பாருங்கள்..

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடியை மிக கடுமையாக சமீபத்தில் விமர்சித்தார் அண்ணாமலை. தற்குறி தலைவர் என்ற ரேஞ்சுக்கு தரக்குறைவாக இருந்தது அந்த விமர்சனம். மேலும், அதிமுக. திமுகவில் டை அடித்தவர்கள் தான் அரசியல் செய்கிறார்கள் எனும் அவரது விமர்சனம் அதிமுக, திமுகவில் டென்சனை ஏற்படுத்தியது.

annamalai edappadi palaniswami

இந்த நிலையில், பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் இளைஞர்களா ? டை அடிக்காத தலைவர்களா ? என பொறுமிய எடப்பாடி தரப்பு, பாஜகவில் டை அடிப்பவர்கள் யார் யார் இருக்கிறார்கள் என விபரங்கள் சேகரித்தது. புகைப்பட ஆதாரங்களையும் தேடினர். சில புகைப்படங்கள் கிடைக்க... அதை வைத்து ட்ரோல் ரெடி செய்து ஒரு படத்தை பரப்பி வருகிறார்கள் அதிமுகவினர்.

இந்த படம் தற்போது அதிமுக, திமுக, பாஜக தரப்பில் பரவி, அண்ணாமலைக்கு அட்டாக் கொடுத்தபடி இருக்கின்றனர். லண்டன் சென்றுள்ள அண்ணாமலைக்கும் இந்த படங்கள் ஃபார்பேர்ட் செய்திருக்கிறார்கள் பாஜகவில் உள்ள அவரது ஆதரவாளர்கள்.

இந்தப் படங்கள் உண்மையா போலியா தெரியாது. பெரும்பாலும் போலியாக இருக்கவே வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். ஆனால் பாஜகவில் அண்ணாமலை கூட இருப்பவர்கள் வயதில் மூத்தவர்கள் என்பதை காட்டுவதற்காக இவ்வாறான படங்களை வெளியிட்டு வருகிறது எதிர் தரப்பு என்பது மட்டும் உறுதியாகத் தெரிகிறது.

ஆனால் ஒன்று.. தமிழக அரசியல் எத்தனையோ ஆக்கப்பூர்வமான விவாதங்களை பார்த்தது. ஒருவருக்கு ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டாலும் அது மக்களுக்கு பலன் கொடுக்கக் கூடியதாக இருக்கும். ஆனால் இப்படி தலைமுடி என்ன கலரில் இருக்கிறது என்பதை புகைப்படமாக போட்டு பரப்பிக் கொண்டிருக்கும் நிலைமைக்கு அரசியல் தரம் போய்விட்டது என்பது கண்டிப்பாக வருத்தத்துக்கு உரியதுதான்.

மக்களுக்கு தேவையானதை மட்டும் விவாதித்து விட்டு, தலைக்கு உள்ளே என்ன இருக்கிறது என்பதை யோசிக்க வேண்டுமே தவிர தலைக்கு மேல் உள்ள விவகாரங்களை தனியே தள்ளி விடுவது தான் தமிழ்நாடு அரசியலுக்கு அழகு. நீங்க என்ன சொல்றீங்க மக்களே. கமெண்டில் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+