தொலைச்சுப்புடுவேன்..பகிரங்கமாய் மிரட்டிய ராஜேந்திர பாலாஜி! எடப்பாடியிடம் புலம்பிய மாஃபா பாண்டியராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைதியாக இருந்த அதிமுகவுக்குள் மீண்டும் புயலை கிளப்பி இருக்கிறது அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு. முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் அதிமுகவை காட்டிக் கொடுத்துவிட்டு ஓடியவர் என ராஜேந்திர பாலாஜி மிகக் கடுமையாக விமர்சித்து பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசி இருக்கிறார் மாஃபா பாண்டியராஜன்.

ஜெயலலிதா இருந்தபோது அவரது குட் புக் பட்டியலில் இருந்த அமைச்சர்களின் ஒருவராக இருந்தவர் மாஃபா பாண்டியராஜன். தற்போது அவர் பாஜகவுக்கு அல்லது தமிழக வெற்றிக்கழகத்திற்கோ செல்லலாம் என கூறப்படுகிறது.

AIADMK Rajendra Balaji Ma Foi Pandiarajan

2009ஆம் ஆண்டு வரை நடிகர் விஜயகாந்தின் தேமுதிக கட்சியில் இருந்த மாஃபா பாண்டியராஜன், 2009 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதற்குப் பிறகு 2011 சட்டமன்றத் தேர்தலில் தேமுதிகம் அதிமுக கூட்டணியில் இணைந்து போது விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதற்கு பிறகு விஜயகாந்த் அதிமுக இடையே மோதல் வெடித்த நிலையில் ஒன்பது எம்எல்ஏக்கள் அதிமுக ஆதரவு நிலைப்பாட்டை எடுத்தனர். அதற்குப் பிறகு 2016 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற அவர் அமைச்சராக இருந்தார். ஓபிஎஸ் அதிமுகவிலிருந்து முதன்முறையாக வெளியேற்றப்பட்ட போது அவர் பக்கம் சென்ற ஒரே அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

அதற்குப் பிறகு கட்சியை இணைந்த போது எடப்பாடி பழனிச்சாமி பக்கம் சென்று அவர், மீண்டும் ஓபிஎஸ் வெளியேற்றப்பட்ட போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பிலேயே இருந்து கொண்டார். இருந்த போதும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர் என்ற முத்திரை பாண்டியராஜன் மீது இருக்கிறது. தொடர்ந்து ஆவடியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்த நிலையில் மீண்டும் விருதுநகர் அரசியலுக்கு செல்ல முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய மாஃபா பாண்டியராஜன், ராஜேந்திர பாலாஜி குறுநில மன்னர் போல செயல்படுகிறார் என பேசினார். இதனால் ராஜேந்திர பாலாஜிக்கும் மாஃபா பாண்டிராஜனுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த நிலையில் தான் தன்னைப் பற்றி பேசிய மாஃபா பாண்டியராஜனை விலாசி உள்ளார் ராஜேந்திர பாலாஜி.

சிவகாசியில் இன்று அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி," அதிமுகவை எதிர்க்கும் திமுகவுக்கு நான் குறுநில மன்னர் தான். எங்களை அழிக்க நினைப்பவர்களை பார்த்துக் கொண்டிருக்க நாங்கள் கோழை அல்ல. நீ ஏன் குறுக்கே வருகிறாய். போகிற போக்கில் எட்டி தள்ளி விட்டு சென்று விடுவேன். காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ,பாரதிய ஜனதா தேமுதிக கட்சியில் இருந்தவன் நீ.. வெட்கமாக இல்லையா.. நீ வந்து என்னிடம் போட்டி போடுகிறாயா?

நீ யார்? சாதியைச் சொல்லி என்னை விரட்ட முடியாது. இந்த இயக்கத்தை காட்டி கொடுத்து விட்டு ஓடியவன் நீ.. நான் எதற்கும் பயப்பட மாட்டேன். எடப்பாடி பழனிச்சாமியின் கட்டளைகளை நிறைவேற்றுவேன். நீ ஜெயலலிதாவை அசிங்கமாக பேசிய வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கு.. அணி மாறி சென்றவர்களுக்கு சால்வை போடும்போது அதனை வேடிக்கை பார்க்க நான் என்ன கிறுக்கனா? தொலைச்சுப்புடுவேன்.. நீ ஆண்மகனாக இருந்தால் உன் கருத்தை விருதுநகரில் சொல்லி இருக்க வேண்டும். சென்னைக்கு ஓடிப்போய் கருத்து சொல்கிறாய். என்னை மீது நீ விருதுநகரில் நீ என்ன செய்து விட முடியும்" என பேசி இருந்தார்.

ஏற்கனவே ஜெயலலிதா இருந்தபோது தனக்கு இருந்து அங்கீகாரம் தற்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் இருக்கும் போது கிடைக்கவில்லை என அதிருப்தியில் இருக்கிறார் பாண்டியராஜன். மேலும் செங்கோட்டையன் உள்ளிட்ட சில மூத்த அமைச்சர்களும் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஒரு முன்னால் அமைச்சரை மற்றொரு முன்னாள் அமைச்சர் ஒருமையில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரில் சந்தித்து புகாராக கொடுத்திருக்கிறார் மாஃபா பாண்டியராஜன். இந்த சந்திப்பின்போது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியதோடு ராஜேந்திர பாலாஜி பேசிய வீடியோவையும் போட்டு காட்டியதாக கூறப்படுகிறது. எதுவாக இருந்தாலும் பேசிக் கொள்ளலாம்.. தற்போது ஊடகங்களிடம் எதுவும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி பாண்டியராஜனிடம் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+