பாமக போட்டியிடும் 18 தொகுதிகள் எவை? வெளியானது உத்தேச பட்டியல்.. எல்லாமே வட மாவட்டங்களில்?
சென்னை: என்.டி.ஏ கூட்டணியில் பாமகவுக்கு ஒதுக்கப்பட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் பாலக்காடு, திருத்தணி, செஞ்சி, திண்டிவனம் அல்லது அரூர், வானூர், காட்டுமன்னார்கோயில், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தர்மபுரி, அந்தியூர், ஓமலூர், சங்கரகிரி, விக்கிரவாண்டி, செய்யாறு, ஜெயங்கொண்டம், மயிலம், குன்னம் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கடந்த 35 ஆண்டு கால வரலாற்றில் பாமக மிகக் குறைவான தொகுதிகளில் இப்போதுதான் போட்டியிடுகிறது. 18 தொகுதிகளிலும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட உள்ளது பாமக. அக்கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அதிமுகவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. வேட்பு மனு தாக்கல் வரும் 30 ஆம் தேதி தொடங்குகிறது. தேர்தல் நாள் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்தார். அதைத் தொடர்ந்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அழைப்பின் பேரில் டெல்லி சென்றனர்.
இதையடுத்து, பியூஷ் கோயல் நேற்று சென்னை வந்தார். அதிமுக தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக, பாமக, அமமுக ஆகிய கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்பட்டது. அந்த வகையில் பாஜகவுக்கு 27 தொகுதிகள், பாமகவுக்கு 18 தொகுதிகள், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.
இந்த நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாட்டாளி மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. பாட்டாளி மக்கள் கட்சி வட மாவட்டங்களில் உள்ள பெரும்பான்மையான தொகுதிகளில் போட்டியிட உள்ளதாகத் தெரிகிறது.
அந்த பட்டியலில் பாலக்காடு, திருத்தணி, செஞ்சி, திண்டிவனம் அல்லது அரூர், வானூர், காட்டுமன்னார்கோயில், பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம், தர்மபுரி, அந்தியூர், ஓமலூர், சங்கரகிரி, விக்கிரவாண்டி, செய்யாறு, ஜெயங்கொண்டம், மயிலம், குன்னம் உள்ளிட்ட தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.
பாமக போட்டியிடும் தொகுதிகள் - உத்தேச பட்டியல்
* பாப்பிரெட்டிபட்டி
* பென்னாகரம்
* கும்மிடிப்பூண்டி
* தருமபுரி
* குன்னம்
* விழுப்புரம்
* அந்தியூர்
* ஆற்காடு
* ஓமலூர்
* திருவள்ளூர்
* சங்ககிரி
* பாலக்கோடு
* விக்கிரவாண்டி
* திருத்தணி
* செய்யாறு
* செஞ்சி
* ஜெயங்கொண்டம்
* திண்டிவனம் (அ) அரூர்
* மயிலம்
* வானூர் (அ) காட்டுமன்னார்கோவில்
* நெய்வேலி
* விருத்தாசலம்
* மேட்டூர்
* சோளிங்கர்
* புவனகிரி
பாமக - இதுவரை சட்டசபை தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகள்
1996 சட்டசபை தேர்தல் - பாமக - திவாரி காங்கிரஸ் கூட்டணி 116 தொகுதிகள்
2001 சட்டசபை தேர்தல் - அதிமுக கூட்டணியில் 27 தொகுதிகள்
2006 சட்டசபை தேர்தல் - திமுக கூட்டணியில் 31 தொகுதிகள்
2011 சட்டசபை தேர்தல் - அதிமுக கூட்டணியில் 30 தொகுதிகள்
2016 சட்டசபை தேர்தல் - தனித்துப் போட்டி 232 தொகுதிகள்
2021 சட்டசபை தேர்தல் - என்.டி.ஏ கூட்டணியில் 23 தொகுதிகள்
2026 சட்டசபை தேர்தல் - என்.டி.ஏ கூட்டணியில் 18 தொகுதிகள்
அதிமுக கூட்டணியில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் (அமமுக) போட்டியிட உள்ள தொகுதிகளின் உத்தேச பட்டியல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை, சோளிங்கர் அல்லது திருப்பத்தூர், பூவிருந்தவல்லி, நாங்குநேரி, ஒட்டப்பிடாரம், பெரியகுளம், மதுரை மத்தி, தஞ்சாவூர், காரைக்குடி, திருச்சி மேற்கு, மன்னார்குடி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
-
தவெகவில் இணைந்த நடிகர் மீசை ராஜேந்திரன்.. விஜயகாந்த் நிழலாகவே பயணித்தவர்.. அதிமுகவில் இருந்து ஜூட்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா? -
வந்துட்டேன்னு சொல்லு.. மீண்டும் எடப்பாடி கையில் அதிமுக? சிவிஎஸ் கூட்டிலிருந்து பறந்த எம்எல்ஏ.கள்! யார்? -
கீழ்தளத்தில் ராஜினாமா.. மேல்தளத்தில் இணைப்பு.. தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டது உண்மை.. ஓ.எஸ்.மணியன்! -
கண்கள் பனித்தது.. இதயம் இனித்தது! எடப்பாடி தான் எங்களுக்கு பொதுச் செயலாளர்! யூடர்ன் அடித்த வேலுமணி! -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
10 வருடங்களில் 5 கட்சி.. மதுரை டாக்டர் சரவணன் கடந்து வந்த அரசியல் கட்சிகள் லிஸ்ட்! -
அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் இசக்கி சுப்பையா.. கைப்பட கடிதம் கேட்ட சபாநாயகர் -
“கூவத்தூர் மாடல் மறந்து போச்சா? தோல்வியை மறைக்க அரசு மீது பழிபோடுகிறார்” - எடப்பாடிக்கு தவெக பதிலடி -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
"வெறும் 2 எம்எல்ஏக்கள் தான்".. யார் அவர்கள்? மதுரை உள்பட10 தென்மாவட்டங்களில் பரிதாப நிலையில் அதிமுக












Click it and Unblock the Notifications