"ஈரக்குலையே" நடுங்கி போச்சு.. வாசற்படியிலேயே நெளிந்த "நாகராஜன்".. எகிறி குதித்து மகனை மீட்ட தாய்

மகனை பாம்பிடமிருந்து காப்பாற்றிய தாய்க்கு பாராட்டு குவிந்து வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2 நாட்களாகவே ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த பலரும், அந்த பெண்ணுக்கு தங்கள் பாராட்டையும், வாழ்த்தையும் தெரிவித்து வருகிறார்கள்..!
வித்தியாசமான வீடியோக்கள் எப்போதுமே இணையத்தில் டிரெண்டாகிவிடும்.. அதேபோல, இதயத்தை பிழிந்தெடுக்கக்கூடிய அல்லது அதிர்ச்சி தரக்கூடிய, நெகிழ்ச்சி தரக்கூடிய வீடியோக்களும் சோஷியல் மீடியாவில் வைரலாகும்

அதிலும், பாம்புகளின் வீடியோக்கள் என்றால் எப்போதுமே வைரல் ஆகிவிடும்.. பாம்பை கண்டால் அனைவருக்குமே பயம் இருந்தாலும், வீடியோ என்றால், அதை ஆர்வத்துடன் பார்க்க முன்வருகின்றனர்.

பாய்சன்

பாய்சன்

அந்தவகையில்தான், இந்த வீடியோவையும் இணையவாசிகள் கண்டு அதிர்ந்து போயுள்ளனர்.. சிசிடிவியில் பதிவான இந்த காட்சியில், ஒரு வீட்டின் வாசலில் நாகப் பாம்பு இருந்தது.. அது கொடிய விஷம் உடையது.. சுமார் 8 நீளத்துக்கு அந்த பாம்பு காணப்படுகிறது. வாசப்படியிலேயே அந்த பாம்பு நீண்ட நேரம் நெளிந்து கிடக்கிறது.. பிறகு, மெல்ல ஊர்ந்து போக முயல்கிறது.. அந்த நேரம் பார்த்து, அந்த வீட்டில் இருந்து தாயும், அவரது ஆண்குழந்தையும் வெளியே வருகிறார்கள்..

 ஒரே செகண்ட்

ஒரே செகண்ட்

வாசற்படியில் இருக்கும் பாம்பை பார்க்காமலே, சிறுவன் அதை தாண்டி குதித்தோடுகிறார்.சிறுவனை கண்டதும் பாம்புக்கு கோபம் வந்து, சீற்றத்துடன், குழந்தையை தீண்ட வருகிறது.. இதை பார்த்து பதறி போன, அந்த குழந்தையின் தாய், மின்னல் வேகத்தில் பாய்ந்து வந்து குழந்தையை தூக்கி, பாம்பிடமிருந்து காப்பாற்றுகிறார்... ஒரு செகண்ட் தாமதமாகியிருந்தாலும், பாம்பு கொத்தியிருக்கும்..

 ஜம்ப் - பெண்

ஜம்ப் - பெண்

அதற்குள் தாய் வாசப்படியில் இருந்து எகிறி குதித்து, வந்து சிறுவனை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டார். அந்த காட்சியில் இவை அனைத்துமே பதிவாகி உள்ளது.. இந்த வீடியோ எங்கே? எப்போது? எடுக்கப்பட்டது என்பது உறுதியாக தெரியவில்லை.. ஆனாலும், இந்த பெண்ணின் வீட்டிற்கு, எதிர் வீட்டில் சிசிடிவி பொருத்தியிருந்துள்ளனர். வேறு ஒரு காரணத்திற்காக சிசிடிவி காட்சிகளை ஆராயும்போது, இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்துள்ளது..

ஷாக்

ஷாக்

நெஞ்சை பதைபதைக்க வைக்கும் இந்த சிசிடிவி காட்சியை பார்க்கும் அனைவருமே அதிர்ச்சிக்குள்ளாகிவிட்டனர்.. இணையத்திலும் வீடியோ வைரலாகி கொண்டிருக்கிறது.. குழந்தையை காத்த வீர பெண்மணி என்று அந்த தாய்க்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள்.. மேலும் பலர், தாய்ப்பாசத்துக்கு முன்னே எதுவும் வெல்ல முடியாது என்றும் பதிவிட்டு வருகிறார்கள்.. ஆனால், ஒருசிலர், பாம்பு சீறியபடியேதான் காணப்படுகிறதே தவிர, சிறுவனை தீண்டியிருக்காது என்கிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+