TET Exam: ஆசிரியர் தகுதி தேர்வு தேதிகள் அறிவிப்பு.. பிப்ரவரி 18 முதல் ஏப்ரல் 10 வரை விண்ணப்பிக்கலாம்
சென்னை: தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதிக்கான ‛டெட்' தேர்வு (TET Exam)தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ‛டெட்' தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்ற TET எனும் ஆசிரியர் தகுதி தேர்வில் பாஸாக வேண்டும். இந்த ‛டெட்' தேர்வு என்பது ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2026ம் ஆண்டுக்கான ‛டெட்' தேர்வு தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன.

ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் தேர்வு தேதிகள், விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் உள்ளிட்ட பிற விவரங்கள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 4, 5ல் தேர்வு
இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளதாவது: ‛‛தமிழகத்தில் ஜூலை 4, 5 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறும். ஜூலை 4ல் ‛டெட்' முதல் தாள் தேர்வும், ஜூலை 5ம் தேதி ‛டெட்' 2ம் தாள் தேர்வு நடைபெறும்.
தேர்வுக்கு பிப்ரவரி 18 ம் தேதி முதல் ஏப்ரல் 10 ம்தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். தேர்வுக்கு முந்தைய நடைமுறைகள் பின்பற்றப்படும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
விண்ணப்பதாரர்கள் www.trb.tn.nic.in என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளம் மூலம் இணையவழியில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் தங்களுடைய பதிவுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகும். முந்தைய நடைமுறை தான் பின்பற்றப்படும் என்று கூறப்பட்டுள்ளதால் இதற்கு முன்பே போல் ஆசிரியர்கள் தங்களின் தேர்வுக்கு தயாராகலாம்.
டெட் தேர்வு பின்னணி
முன்னதாக தமிழகத்தில் தொடக்க கல்விக்கான இடைநிலை ஆசிரியர், உயர்நிலை மற்றும் மேல் நிலைப் பள்ளிகளுக்கான பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம், ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். தேசிய ஆசிரியர் கல்வி நிறுவனத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி இத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில் இன்று தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அம்மா சென்டிமென்ட்.. அறுக்காதீங்க லாரன்ஸ்! கொந்தளித்த ப்ளூ சட்டை மாறன்! சரமாரி விமர்சனம் -
குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க என்ன நடவடிக்கை?.. தமிழக அரசுக்கு அண்ணாமலை சரமாரி கேள்வி -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
செங்கல்பட்டு-திண்டிவனம் 6 வழிச்சாலை விரிவாக்கம்: NHAI அதிரடி திட்டம் - போக்குவரத்து நெரிசல் ஓவர்! -
கரண்ட் பில் கட்ட கடைசி தேதி முடிஞ்சுடுச்சா? பதறாதீங்க.. இனிமேல் இப்படி ஒரு வசதி இருக்கு! -
சென்னையில் சம்பவம் இருக்கு.. ஹை அலர்ட் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
திருவள்ளூர் முட்புதரில் 3 வயது குழந்தை... ஒரே நாளில் 5 சிறுமிகளுக்கு கொடுமை! சிங்கப்பெண் படை எங்கே? -
ஓமன் அருகே கப்பலில் உயிரிழந்த தமிழக மாலுமி.. குளிர்ந்த நீரால் உடலை பாதுகாக்க போராடும் சக ஊழியர்கள் -
ஏமாற்றம் கொடுத்த மேட்டூர்.. கைவிடாத மழை! டெல்டாவுக்கு இன்று கனமழை அலர்ட்! -
கள உதவியாளர் தேர்வு: இனி 'ஷூ' அணிந்து கம்பம் ஏறலாம்! மின்வாரியத்தின் புதிய விதிகள்!












Click it and Unblock the Notifications