திடீர் டிரெண்டிங் "#VanniyarsBoycottRajinikanth"- ரஜினிகாந்த் 170-வது படம்- வன்னியர் எதிர்ப்பு ஏன்?
சென்னை: ஜெய்பீம் இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 170-வது திரைப்படம் பெரும் எதிர்ப்பை எதிர்கொள்ள தொடங்கி இருக்கிறது. படத்தின் இயக்குநர் ஞானவேல், நடிகர் ரஜினிகாந்த் இருவருமே பாமகவால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு எதிர்ப்புகளை எதிர்கொண்டவர்கள் என்பதால் தற்போது #VanniyarsBoycottRajinikanth என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காகி வருகிறது.
1999-ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த படையப்பா படம் சக்கை போடு போட்டது. மிகப் பிரம்மாண்ட வெற்றியைப் பெற்றது படையப்பா படம். இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்து 2002-ல் வெளியான படம் பாபா.

ரஜினியின் சர்ச்சை பேச்சு: பாபா படம் திரையிடப்படுவதற்கு முன்னர் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார் நடிகர் ரஜினிகாந்த். அங்கு பேசிய ரஜினிகாந்த், சந்தனக் கடத்தல் வீரப்பனை கொலை செய்ய வேண்டும் என ஆவேசப்பட்டார். இதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவிக்க இங்கிருந்து நடிகர் ரஜினிகாந்துக்கும் பாமகவுக்கும் இடையே ஏழாம் பொருத்தம் ஜெட் வேகத்தில் பயணித்தது.
கொந்தளித்த பாமக: பாபா படம் திரையிடப்பட்டது. ரஜினிகாந்த் பாபா முத்திரையும் புகை பிடிக்கும் காட்சிகள் போஸ்டரில் இடம் பெற்றன. சினிமா காட்சிகளில் புகை பிடிக்கும் பழக்கத்தை ஊக்கப்படுத்துவதா? என அப்போது அன்புமணி ராமதாஸும் எதிர்ப்பு தெரிவித்தார். ரஜினிகாந்த், பாமக இடையேயான மோதல் பாபா படத்தை வகையாக பதம் பார்த்தது. வட தமிழ்நாட்டில் 'பாபா' படம் திரையிடப்படவே முடியாத சூழ்நிலை உருவானது.
வட தமிழ்நாட்டில் பாபா உருவாக்கிய பதற்றம்: ஜெயங்கொண்டத்தில் பாபா படம் திரையிட்ட தியேட்டர் திரை கிழிக்கப்பட்டது. பாபா படப்பெட்டி சுருள் கடத்திச் செல்லப்பட்டு தீ வைத்து எரிக்கப்பட்டது. பாபா படப் பெட்டியுடன் பாமகவினர் முந்திரி காடுகளில் பதுங்கி கொண்டனர். ரஜினிகாந்த் தன் வாழ்நாளில் அப்படி ஒரு எதிர்ப்பை தமிழ்நாட்டில் எதிர்கொண்டது இல்லை. இதன் பின்னர் லோக்சபா தேர்தலில் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகளில் எதிர்த்து வாக்களிக்க ரசிகர்களை ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டார். இது இருதரப்புக்கும் இடையேயான மோதலை உச்சத்துக்கு கொண்டு போய் நிறுத்தியது. இன்னமும் ரஜினிகாந்துக்கும் பாமகவுக்கும் இந்த மோதல் நெருப்பு அணையாமல்தான் இருக்கிறது.

ஞானவேலுக்கும் பாமகவுக்கும் என்ன பிரச்சனை?: இதேபோல திரைப்பட இயக்குநர் ஞானவேலுக்கும் பாமகவுக்கும் இடையேயும் மோதல் இருக்கிறது. ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கியவர் ஞானவேல். அந்தப் படத்தில் வன்னியர்களை இழிவுபடுத்துகிற காட்சிகளை ஞானவேல் இடம் பெறச் செய்தார் என்பது பெரும் சர்ச்சையாக வெடித்தது. கொடூர வில்லன் வீட்டு காலண்டரில் அக்னி கலசம் படம் இருந்ததுதான் பிரச்சனையின் மையம். ஜெய்பீம் படக் குறியீடுகள் பாமகவுக்கு எதிராக இருந்ததால் கொந்தளித்தனர் பாமகவினரும் வன்னியர்களும். இந்த பஞ்சாயத்தில் தெரியாமல் காட்சிகள் இடம் பெற்றுவிட்டன என வருத்தம் தெரிவிக்கும் நிலைக்குப் போனார் இயக்குநர் ஞானவேல்.
ரஜினி- ஞானவேல் தலைவர் 170: இப்படி பாமகவுக்கு எதிரான ரஜினிகாந்த்- ஞானவேல் இருவரும் இணைந்து உருவாக்கும் படம்தான் தலைவர் 170. ஒவ்வொரு நாளும் பிரம்மாண்டமான அறிவிப்புகளுடன் தலைவர் 170 குறித்த செய்திகள் வந்து கொண்டே இருக்க இப்போது #VanniyarsBoycottRajinikanth என்ற ஹேஷ்டேக் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. எக்ஸ் தளத்தில் டிரெண்டிங்கில் இருக்கிறது #VanniyarsBoycottRajinikanth. இந்த ஹேஷ்டேக்கில் பாபா படப் பிரச்சனை தொடர்பாக டிவி சேனல்களில் ஒளிபரப்பான செய்திக் குறிப்புகள் அதிகமாக ஷேர் செய்யப்படுகின்றன. அதாவது பாபா காலத்தில் இருந்தே ரஜினிகாந்துடன் மோதல் இருக்கிறது என்பதை கூர்மைப்படுத்துகிறார்களாம். அதேபோல ஞானவேல் வருத்தம் தெரிவித்த செய்தி கார்டுகளும் பகிரப்பட்டு வருகின்றன. ரஜினிகாந்த்- ஞானவேல் கூட்டணியின் 170-வது படம் தொடங்கும் போதே இந்த அக்கப்போர்.. படம் வரும் போது எந்த மாதிரி யுத்தம் வருமோ?
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications