தம்பிதுரைக்கு திடீர் நெஞ்சுவலி.. அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: லோக்சபா துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவர்களில் ஒருவருமான தம்பிதுரை, நெஞ்சுவலி காரணமாக சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னாள் முதல்வர், ஜெயலலிதாவின் 2வது ஆண்டு நினைவஞ்சலி சென்னையில் இன்று நடைபெற்றது. இதையொட்டி, தம்பிதுரை சென்னை வந்திருந்தார். நிகழ்ச்சிகள் முடிந்த நிலையில் இன்று பிற்பகலில், தம்பிதுரைக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதுகுறித்து நெருங்கியவர்களிடம் கூறியதும், தம்பிதுரையை, சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு, அவருக்கு, ஆஞ்சியோ சிகிச்சை செய்யப்பட்டு ஐசிசியூ பிரிவில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். தம்பிதுரையை சந்தித்து நலம் விசாரிக்க முதல்வர், துணை முதல்வர் இரவு அப்போலோ செல்கின்றனர்.












Click it and Unblock the Notifications