பாஜக சங்காத்தமே வேணாம்.. தம்பித்துரை உணர்த்தும் குறிப்பு.. தெளிவாகிறது அதிமுக!
பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று தம்பிதுரை தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை: கொஞ்சம் கொஞ்சமாக அதிமுக கூட்டணி சம்பந்தமாக விடை கிடைத்து கொண்டிருக்கிறது.
நேற்று மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஒரு விஷயத்தை குழப்பி விட்டு இருக்கிறார். மற்றொரு விஷயத்தை ஓரளவு தெளிவுபடுத்தி இருக்கிறார்,
ஜெயலலிதா இறப்புக்கு என்ன காரணம் என்று 2 வருடமாக எல்லோருமே மண்டை குடைந்து வருகிறார்கள். இதுசம்பந்தமாக ஒரு கமிஷம் நியமிக்கப்பட்டு, அதன் விசாரணையும் இறுதிகட்டத்தில் உள்ளது. மரணம் சம்பந்தமாக அதிமுக, அமமுக, மற்றும் ஜெயலலிதா உறவினர்கள் என்றுதான் விசாரணை வளையம் நீண்டு வந்திருக்கிறது.

திமுகதான் காரணம்
ஆனால் முதல்முறையாக தம்பிதுரை ஒரு புது குண்டை தூக்கி போட்டுள்ளார். அதாவது ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் திமுகதான் என்று செய்தியாளர்கள் முன்னிலையிலேயே சொல்லி இருக்கிறார். "திமுக தொடர்ந்த வழக்கு தொடர்ந்தது, அதற்கு உடந்தையாக இருந்தது காங்கிரஸ். ஜெயலலிதா ஜெயிலுக்கு போனால் இறந்துவிடுவார் என்று திட்டமிட்டனர். அதனால் திமுகவின் முழு சதிதான் ஜெயலலிதா மரணமடைய காரணம்" என்று சொன்னார்.

உண்மை உள்ளதா?
அரசியல் லாபத்துக்காக இதை தம்பிதுரை சொன்னாரா, அல்லது அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக இதை சொன்னாரா என தெரியவில்லை. ஆனால் ஆறுமுகசாமி தம்பிதுரையின் இந்த பேச்சை அவசியம் உற்றுநோக்க வேண்டும். யார் வேண்டுமானாலும் என்ன பழியை வேண்டுமானாலும் போடுவதா? அல்லது இந்த கூற்றில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.

அதிமுக அறைகூவல்
மற்றொன்று, கூட்டணி குறித்து அதிமுக தலைமை முடிவு செய்தாலும், பாஜகவுடன் மட்டும் கனவிலும் கூட்டணி இல்லை என்று சொல்லி இருக்கிறார். இந்த அறிவிப்பைதான் அமமுக நீண்ட காலமாக எதிர்பார்த்து வருகிறது. பாஜகவுடன் ஒட்டு உறவு இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே அமமுகவின் விருப்பம். மற்றொரு பக்கம் அமமுகவை அதிமுக இணையும்படி அறைகூவல்விட்டு வருகிறது.

பாஜகவிடம் ஏழரை
அமமுகவின் ஒரு தரப்பும் இணைப்புக்கு தயாராகி வருகிறது. அதனால் தம்பிதுரையின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. ஆனால் இதிலும் ஒரு விஷயம் இடிக்கிறது. அமமுகவுக்கு பாஜக ஆகாது என்பது டிடிவி தினகரனின் கருத்துதான். அவருக்குதான் பாஜகவிடம் எப்போதுமே ஏழரை. பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று அதிமுக சொல்வதானால் அது தினகரனுக்காகவா? அல்லது 18 எம்எல்ஏக்களுக்காகவா? என தெரியவில்லை.

எப்போ தீர்வு?
18 எம்எல்ஏக்களுக்கும் பாஜகவும் ஒரு சம்பந்தமும் கிடையாது. தினகரனுக்காகத்தான் என்றால்,பிறகு ஏன் அவரை கட்சிக்குள் சேர்க்க மாட்டோம் என்றும் ஒரு பக்கம் அதிமுக தரப்பு சொல்கிறார்கள் என தெரியவில்லை. இந்த குழப்பத்துக்கு மட்டும் விடை கிடைத்துவிட்டால் கூட்டணி சமாச்சாரம் இன்னும் பளிச்சென தெரிந்துவிடும்.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications