ராகுல் தகுதி நீக்கம்! உச்சகட்ட அராஜகம்! பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? தமிமுன் அன்சாரி ஆதங்கம்!
சென்னை: ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பது ஒரு அராஜக நடவடிக்கை என்றும் பின்னணியில் உள்ள சூழ்ச்சி என்ன? எனவும் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி ஆதங்கத்தை கொட்டித்தீர்த்துள்ளார்.
ராகுல் காந்திக்கு கொடுக்கப்படும் நெருக்கடிகள் அவருக்கான சிவப்பு கம்பளங்களாக மாறும் என தமிமுன் அன்சாரி தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;

ராகுல் தகுதி நீக்கம்
2019 ஆம் ஆண்டு கர்நாடகாவில் ஒரு தேர்தல் பரப்புரை பேச்சுக்காக ராகுல் காந்தி அவர்களுக்கு குஜராத் நீதிமன்றம் இரண்டாண்டு தண்டணை விதித்து நேற்று தீர்ப்பளித்தது.தனது பேச்சில் உள்நோக்கம் ஏதுமில்லை என்று அவர் கூறிய பிறகும், நீதிமன்றம் அதை கவனத்தில் கொள்ளவில்லை.
இதனிடையே இன்று மக்களவை செயலாளர், ராகுல் காந்தியை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவதாக அறிவித்துள்ளார்.

சூழ்ச்சி என்ன?
இது இந்திய ஜனநாயகத்தை பாழ்படுத்தும் மற்றொரு அராஜக நடவடிக்கையாகும்.அடுத்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் வரும் நிலையில், இப்படி ஒரு தீர்ப்பு வந்திருப்பதும், உடனடியாக இன்று அவர் MP பதவியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதும் பலத்த சந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் மேல்முறையீடு செய்ய வசதியாக 30 நாட்கள் நீதிமன்றம் அவகாசம் தந்து அவருக்கு பிணை வழங்கியிருக்கும் நிலையில், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை காரணம் காட்டி அவசர அவசரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதற்கு பின்னால் இருக்கும் சூழ்ச்சி என்ன? என்ற கேள்விகள் எழுகிறது.

வலதுசாரி ஃபாஸிஸ்டுகள்
ராகுல் காந்தி அவர்கள் நடத்திய 'ஒற்றுமை யாத்திரை' ஏற்படுத்திய தாக்கம்; வலதுசாரி ஃபாஸிஸ்டுகளை அச்சுறுத்தியிருக்கும் நிலையில்; அவர் மீண்டும் அருணாச்சலப் பிரதேசம் முதல் குஜராத் வரை அடுத்தக் கட்ட யாத்திரை போக திட்டமிட்டிருந்தார்.இது ஃபாஸிஸ்ட்டுகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது என்பதை அனைவரும் அறிவர். ஒன்றிய அரசுக்கு எதிராக வீசத் தொடங்கியிருக்கும் எதிர்ப்பலையும்,நாட்டு மக்களின் கவனம் தற்போது ராகுல் காந்தி மீது குவிவதும் கூடுதலாக அவர்களுக்கு அரசியல் அச்சத்தையும் ஏற்படுத்தியது.

ஒடுக்க நினைப்பதில் ஆச்சர்யமில்லை
இந்நிலையில் அதிகார மையங்களின் துணையுடன், ராகுல் காந்தியை அவர்கள் ஒடுக்க நினைப்பதில் ஆச்சர்யமில்லை. இந்த நெருக்கடிகள் அவருக்கான சிவப்பு கம்பளங்களாக மாறப்போகிறது என்பதில் ஐயமில்லை இது காங்கிரஸ் கட்சிக்கோ, ராகுல்காந்தி என்ற தலைவருக்கோ ஏற்பட்டிருக்கும் சோதனை என்று யாரும் கருதக்கூடாது. நாட்டின் எதிர்கால சுதந்திரத்திற்கு ஏற்பட்டுள்ள ஆபத்தாகும். எனவே இந்த நிகழ்வை ஜனநாயக சக்திகள் சாதரணமாக கடந்துபோகாமல், நாட்டுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியாக கருதி உரிய வகையில் மக்களை அணிதிரட்ட தயாராக வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications