தமிமுன் அன்சாரி குறி வைக்கும் முக்கியமான தொகுதி.. சூடுபிடிக்கும் சட்டசபை தேர்தல் களம்!
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் தமிமுன் அன்சாரி, வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் போட்டியிட இப்போதே தொகுதிகளை அடையாளம் காணும் பணிகளில் மும்முரமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் முக்கியமான தொகுதி ஒன்றை குறிவைத்துள்ளாராம்.
கடந்த 2016 -2021 காலக்கட்டத்தில் நாகை தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிறுவனத் தலைவர் தமிமுன் அன்சாரி. கடந்த சட்டசபைத் தேர்தலில் திமுகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்த அவர், இன்று வரை திமுக ஆதரவு குரலாக ஒலித்து வருகிறார். தமிமுன் அன்சாரியை அதிமுக கூட்டணியில் இணைக்க எடப்பாடி பழனிசாமி எவ்வளவோ முயன்றும் அவர் அசைந்து கொடுக்கவில்லை.

இதனிடையே வரும் 2026 சட்டசபைத் தேர்தலில் திருச்சி கிழக்கு தொகுதியில் களமிறங்கும் திட்டத்துடன் தமிமுன் அன்சாரி காய் நகர்த்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சியை மையமாக வைத்து கடந்த 6 மாதங்களாக கட்சி சார்ந்த நிகழ்ச்சிகளை அதிகளவில் நட த்தி வரும் தமிமுன் அன்சாரி, அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகிய இருவரிடமும் நட்புறவு பேணி வருகிறாராம்.
திருச்சி கிழக்கு சட்டசபை தொகுதியில் சிறுபான்மையினர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளதால் இங்கு களம் காண கடும் முயற்சிகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. நாகையில் போட்டியிடும் எண்ணம் தமிமுன் அன்சாரிக்கு இல்லை எனக் கூறும் அவரது கட்சி நிர்வாகிகள், திருச்சி கிழக்கு அல்லது தஞ்சை தொகுதியில் போட்டியிட வேண்டும் என தாங்கள் விரும்புவதாகவும் கூறுகிறார்கள்.
இதனிடையே திமுக தலைமையின் குட் புக்கிலும் இடம்பெற்றிருப்பதால் விரும்பும் ஒரு தொகுதியை கேட்டுப் பெறுவதில் தமிமுன் அன்சாரிக்கு பெரும் சிக்கல் ஏதும் இருக்காது எனத் தெரிகிறது. வரும் தேர்தலில் இஸ்லாமியர்கள் அடர்த்தியாக வாழும் தொகுதிகளில் தமிமுன் அன்சாரியை வைத்து பரப்புரை மேற்கொள்ளும் திட்டமும் திமுகவுக்கு இருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சி கிழக்கு தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏவாக இனிகோ இருதயராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், அந்த தொகுதியை தமிமுன் அன்சாரிக்கு திமுக வழங்குமா அல்லது சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் வேறு தொகுதி எதனையும் வழங்குமா என்ற விவாதம் அரசியல் களத்தில் எழுந்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications