''நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவப்போக்கு''! கருப்பு தலைப்பாகை அணிந்து மஜக போராட்டம்!
சென்னை: நீட் விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி ஆணவப்போக்குடன் நடந்துக் கொள்வதாக கூறி மஜக சார்பில் கருப்பு தலைப்பாகை அணிவித்து போராட்டம் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய தமிமுன் அன்சாரி, ஆளுநர் ரவி ஆணவத்துடன் பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் நெவர், எவர் என்று பேச அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை எனவும் சாடினார்.

மேலும், இதில் பங்கேற்ற தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், மாணவர் ஜெகதீசும், அவரது தந்தையும் தற்கொலை செய்துக்கொண்டதற்கு காரணம் ஆளுநரின் ஆணவமான பேச்சுதான் என கருதி அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றார்.
அவரைத் தொடர்ந்து பேசிய மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, மக்களால் தேர்வு செய்யப்பட்ட MLA க்கள் கூடி சட்ட சபையில் நிறைவேற்றிய தீர்மானத்தை எதிர்க்கும் அதிகாரம் இவருக்கு வந்தது எப்படி? என்றும், இது ஆளுநரின் ஆணவத்தை தான் காட்டுகிறது என்றும் அனல் கக்கினார். அவரும் ஆளுநர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பிரின்ஸ் கஜேந்திரன் பேசும் போது, நீட்டுக்கு எதிரான மசோதாவில் கையெழுத்து போட மாட்டேன் என்ற அதிகாரத்தை ஆளுநருக்கு எந்த சட்டம் வழங்கியிருக்கிறது என வினவினார்.
நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் சகோதரர் மணிரத்னம் பேசும்போது, NEET க்கு எதிரான அனிதாவின் உயிர் தியாகம் வீணாகாது என்றார். போராட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கருப்பு துணியால் முண்டாசு கட்டி எதிர்ப்பை தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications