ரஜினி பற்றிய எந்த தகவலுமே தமிழருவி மணியனுக்கு சொல்ல மாட்டாங்க போல... டிவி சேனலில் அடிச்சுவிடுறாரே!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான பல தகவல்கள் அவரது கட்சியின் சூப்பர்வைசரான தமிழருவி மணியனுக்கு எதுவும் சொல்வதில்லை போல.. ஆங்கில டிவி சேனலில் தமிழருவி மணியன் பேசியதை பார்க்க இப்படித்தான் தோன்றியது.
நடிகர் ரஜினிகாந்த் ரத்த அழுத்தம் அதிகம் காரணமான ஐதராபாத் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ரஜினிகாந்த் உடல்நிலை தொடர்பாக அப்பல்லோ மருத்துவமனை தொடர்ந்து அறிக்கைகளை வெளியிட்டு வந்தது.
ரஜினிகாந்த் உடல்நலம் தேறிவிட்டதாகவும் டிஸ்சார்ஜ் குறித்து நேற்று பிற்பகல் முடிவு எடுக்கப்படும் என முதலில் தெரிவிக்கப்பட்டது. பின்னர் நேற்று மாலை ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு தனி விமானம் மூலம் சென்னையும் திரும்பிவிட்டார். ரஜினிகாந்த் இனி எப்படியான கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஐதராபாத் மருத்துவமனை அறிவுறுத்தல் விடுத்திருந்தது.

டிச.31-ல் அறிவிப்பு இல்லை
ஐதராபாத் மருத்துவமனை அறிவுறுத்தலின் படி, ரஜினிகாந்த் ஒரு வார காலத்துக்கு முழுமையான ஓய்வில் இருக்க வேண்டும்; கொரோனா தாக்கக் கூடிய சூழ்நிலைகளில் இருந்து தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்தியிருந்தது அந்த அறிக்கை. இதனால் ஏற்கனவே ரஜினிகாந்த் திட்டமிட்டபடி டிசம்பர் 31-ல் புதிய கட்சியின் பெயரை அறிவிப்பது சாத்தியம் இல்லை; கட்சி தொடர்பான ஆலோசனை கூட்டங்களில் பங்கேற்கவும் வாய்ப்பில்லை என்பதும் உறுதியானது.

ரஜினி ரிட்டர்ன் வீடியோ
பின்னர் ரஜினிகாந்த் தனிவிமானத்தில் சென்னை திரும்பினார். ரஜினிகாந்த் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பும் வீடியோக்கள் சமூக வலைதளங்களிலும் வைரலாக ஷேர் செய்யப்பட்டன.

தமிழருவி மணியன் நம்பிக்கை
இந்த நிலையில் டைம்ஸ் நவ் டிவி சேனலுக்கு நேற்று ரஜினிகாந்த் கட்சியின் மேற்பார்வையாளர் அல்லது சூப்பர்வைசரான தமிழருவி மணியன் ஒரு பேட்டி அளித்தார். அந்த பேட்டியில், ரஜினிகாந்த் திங்கள்கிழமையன்றுதான் ஐதராபாத் திரும்புகிறார்; ரஜினிகாந்துடன் ஆலோசனை நடத்தப் போகிறேன்; டிசம்பர் 31-ந் தேதி திட்டமிட்டபடி கட்சியின் பெயர் அறிவிப்பு வெளியாகும் என கூறியிருந்தார்.

தமிழருவியாருக்கு எதுவும் தெரியாதா?
தமிழருவி மணியனின் இந்த பேட்டியை பார்த்தால் அவருக்கு ரஜினி நிலவரம் பற்றி எதுவுமே தெரியவில்லை; ரஜினிகாந்த் அல்லது அவரது அலுவலகத்தினர் தமிழருவி மணியனுக்கு எதனையுமே சொல்வதில்லை; ரஜினிகாந்த் ஏற்கனவே சொன்னது போல எப்படியாவது டிசம்பர் 31-ல் கட்சி பெயர் அறிவிப்பு வெளியிட்டாக வேண்டும் என விரும்புகிறார் என்பது மட்டும் தெளிவாகிறது. ஐதராபாத் மருத்துவமனை அறிக்கை, ரஜினிகாந்த் சென்னை திரும்பியது என எதையுமே அறியாமலா இருந்திருக்கிறார் தமிழருவி மணியன்? பரிதாபமே!
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications