சாப்பிடும் போது பேசக் கூடாது ஏன்? அப்துல் கலாம் கூறிய அட்டகாசமான விளக்கம்.. நடிகர் தாமு பிளாஷ்பேக்
சென்னை: சாப்பிடும் போது ஏன் பேசக் கூடாது என்பதற்கு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு அருமையான விளக்கத்தை கொடுத்ததாக நடிகர் தாமு தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 30 ஆண்டுகளாக நகைச்சுவை நடிகராக இருந்து வருகிறார் நடிகர் காமு. இயக்குநர் பாலசந்தரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்தான் இந்த தாமு. இவர் கல்வி சேவையாளராக இருந்து வருகிறார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் ஆலோசனையுடன் 2011 ஆம் ஆண்டு முதல் கல்வி சேவை வழங்கி வருகிறார். இளைஞர்களின் மனதில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்க பாடுபட்டு வருகிறார். இதற்காக இவர் கலாமிடம் நேரடியாக பயிற்சி பெற்றவர்.
அப்துல் கலாமின் முக்கோணக் கல்விக் கோட்பாட்டை இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தினார் தாமு. போதை விழிப்புணர்வு நிகழ்ச்சி உள்ளிட்டவைகள் மூலம் மாணவர்களுக்கு விழிப்புணர்வை அளித்து வருகிறார். இவர் கலாமுடன் 7 ஆண்டுகளாக பணியாற்றினார். இவர் ஒரு மிமக்ரி கலைஞரும் கூட!
நடிகர், மிமிக்ரி கலைஞர், காமெடியன் என எல்லாவற்றையும் விட அவருடைய கல்வி சேவைதான் தற்போது எல்லார் மனதிலும் நிற்கிறது. போதை குறித்து அவர் விழிப்புணர்வு ஏற்படுத்த பேசும் பேச்சை கேட்டு எப்படிப்பட்டவரும் போதை பழக்கத்திற்கே செல்ல மாட்டார்கள். அந்த வகையில் அற்புதமாக இருக்கும் அவருடைய பேச்சு.
நடிகர் விவேக்கை போல தாமுவுக்கும் அப்துல் கலாமுடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. விவேக்கை எப்படி மரம் நடச் சொன்னாரோ அது போல் தாமுவை வைத்து மாணவர்களை நல்வழிப்படுத்த கூறினார். இந்த நிலையில் ஒரு பேட்டியில் தாமு அப்துல் கலாம் குறித்த சுவையான சம்பவங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த வகையில் ஒரு முறை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் எல்லாரும் சாப்பிட்டு கொண்டே பேசிக் கொண்டிருந்தனர். அப்போது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் வந்தவுடன் எல்லாரும் அமைதியாகவிட்டனராம்.

ஏனென்றால் அவருக்கு சாப்பிடும் போது பேசக் கூடாதாம். இதை தாமுவே கலாமிடம் கேட்டுள்ளார். "ஐயா சாப்பிடும் போது ஏன் பேசக் கூடாது, புரைக்கு ஏறிவிடும் என்பதாலா" என கேட்டுள்ளார். அதற்கு அப்துல் கலாம் ஒரு அற்புதமான விளக்கத்தையும் கூறியுள்ளார். அப்துல் கலாம், தாமுவிடம் Eat என்றால் என்ன என கேட்டுள்ளார்.
அதற்கு தாமு " ஈட் என்றால் சாப்பிடுதல் என்று பொருள் அய்யா" என்று கூறியுள்ளார். அப்போது கலாம் "Eat Experience All the Taste என்று அர்த்தம் என கூறினாராம். அதனால்தான் சாப்பிடும் போது பேசக் கூடாது, டிவி பார்க்கக் கூடாது, போன் பார்க்கக் கூடாது என்றாராம். உணவின் சுவைகளை அனுபவிக்க வேண்டும் என்றாராம். இப்படியொரு விளக்கத்தை கேட்ட தாமுவுக்கு ஷாக் ஆகிவிட்டதாம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications