அதிமுகவில் இணைகிறார் தங்க தமிழ்ச் செல்வன்- ஓபிஎஸ்-க்கு செக் வைக்க ராஜ்யசபா எம்.பியாகிறார்?
Recommended Video
சென்னை: தினகரனின் அமமுக கொள்கை பரப்புச் செயலாளரான தங்க தமிழ்ச்செல்வன் அதிமுகவில் இணைவது உறுதி என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். துணை முதல்வர் ஓபிஎஸ்- மகன் ரவீந்தரநாத்துக்கு செக் வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனை எடப்பாடி தரப்பு ராஜ்யசபா எம்.பியாக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
முதல்வர் எடப்பாடிக்கு எதிராக தினகரன் அணியில் தளபதியாக இருந்தவர் தங்க தமிழ்ச்செல்வன். இவரது தலைமையில்தான் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் புதுவை, குடகு ஹோட்டல்களில் தங்கி குடைச்சல் கொடுத்து வந்தனர்.
ஓபிஎஸ்- ஈபிஎஸ் இணைந்த பிறகு தங்க தமிழ்ச்செல்வனின் உக்கிரம் உச்சமானது. தினகரனை ஆதரித்து தமிழகம் முழுவதும் பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசினார் தமிழ்ச்செல்வன். அவரது எம்.எல்.ஏ. பதவி பறிக்கப்பட்ட விவகாரத்தில் இருந்தே தினகரனுடன் முரண்பட்டு வந்தார். ஆனால் அதை அவ்வப்போது மறுத்தும் வந்தார் தங்கம்.

லோக்சபா தேர்தலில் தோல்வி
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் அவர். அதன் பின்னர் தீவிரமான அரசியல் களத்தில் இருந்து விலகி இருந்தார்.

சன் நியூஸ் பேட்டி
இதனால் தங்க தமிழ்ச்செல்வன் திமுக அல்லது அதிமுகவுக்கு தாவப் போவதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகி வந்தன. இந்நிலையில் சன் நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில், முதல்வர் எடப்பாடி அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார் தங்கம்.

அதிமுகவில் தங்க தமிழ் செல்வன்
அத்துடன் தினகரன் கட்சியை மக்கள் நிராகரித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இதனால் தங்கம் தமிழ்ச்செல்வன் எந்த நேரத்திலும் அதிமுகவுக்கு தாவக் கூடும் என செய்திகள் வெளியாகின. இதை அதிமுக வட்டாரங்கள் உறுதிப்படுத்தியிருக்கின்றன.

ராஜ்யசபா எம்.பி பதவி?
மேலும் துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ரவீந்தரநாத் குமார் எம்.பி. ஆகியோருக்கு டெல்லியில் செக் வைக்கும் வகையில் தங்க தமிழ்ச்செல்வனை ராஜ்யசபா எம்.பி.யாக்கவும் முதல்வர் தரப்பு முயற்சிக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம் ஓபிஎஸ் குடும்பத்தின் டெல்லி செல்வாக்கு ஒரு உறுத்தலாக எப்போதும் தங்கம் இருப்பார் என்பதும் எடப்பாடி தரப்பின் கணக்காம்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications