விஜய்க்கு காங்கிரஸ் தலைவர் + எம்.பி பதவி கொடுக்க தயாரா இருந்தோம்.. ஆனால் தங்கபாலு பிளாஷ்பேக்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சட்டமன்ற தேர்தல் முடிவுகள் அரசியலில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுகவுடன் நீண்ட காலமாக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் தவெக கூட்டணியில் இணைந்தது. தவெக அரசின் அமைச்சரவையிலும் காங்கிரஸ் உள்ளது. ஆனாலும் பல காங்கிரஸ் நிர்வாகிகள் தவெகவை விமர்சிக்கிறார்கள். இந்த விவகாரத்தில் காங்கிரஸ் நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்து நிலவுகிறது. விஜய் நீண்ட காலத்துக்கு முன்பு காங்கிரஸில் இணைய தயாராக இருந்தார் என்றும், அப்போது நடைபெற்ற டெல்லி சீக்ரெட் மீட்டிங்கள் குறித்து அந்தக் கட்சியின் மூத்த நிர்வாகி தங்கபாலு திடுக் தகவல்கள் கூறியுள்ளார்.

புதுக்கோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் மாணிக்கம் தாகூர், "முதலமைச்சர் விஜய் நீண்ட காலத்துக்கு முன்பே காங்கிரஸ் கட்சியில் இணைவதற்கு ஆர்வமாக இருந்தார். ராகுல் காந்தியின் தலைமையை ஏற்றுக் கொள்ள தயாராக இருந்தார். ஆனால் நமது தலைவர்கள் அவரைத் தடுத்துவிட்டனர் என்று கூறியிருந்தார். விஜய்க்கு எப்போதெல்லாம் பிரச்சனை வந்தாலும் காங்கிரஸ் உடன் நிற்கும்.

Thangabalu

வரலாற்றை திரிக்க கூடாது

2026 தேர்தலிலும் அவர் காங்கிரசுடன் கூட்டணி வைக்க நினைத்தார். அதை நடைபெறவிடாமல் மீண்டும் தடுத்தார்கள். தவெக தேர்தலில் வெற்றி பெற்றாலும், அவருக்கு முதல் ஆளாக ஆதரவு கொடுத்தது காங்கிரஸ். அதன் பிறகு தான் மற்றவர்கள் ஆதரவளித்தனர். இந்த கூட்டணி பலமான கூட்டணி. திமுக சொல்லும் பொய்களை எல்லாம் நம்ப வேண்டாம். நம் கூட்டணி வெற்றி பெற்று கொண்டே இருக்கும். திமுக தோற்று கொண்டே இருக்கும்" என்றார்.

இதற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் தங்கபாலு அளித்துள்ள விளக்கத்தில், "ஆரம்ப காலத்தில் காங்கிரஸில் சேர விஜய் ஆர்வம் கட்டினார். தேசிய தலைமையும் ஆர்வமாக இருந்தது. அப்போது நிலவிய அரசியல் சூழல்களால் அந்த முயற்சி கைக்கூடவில்லை. வரலாற்றை திரித்து எழுதுவது சரியில்லை. 2009 ஆம் ஆண்டு தலைவர் ராகுல் காந்தியை, விஜய் சந்தித்தார். அவருக்கு இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கலாம் என நான் பரிந்துரைத்தேன்.

எம்பி பதவியும்

மேலும் மாநிலங்களவை எம்பி பதவி வழங்குவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். அதுமட்டுமல்ல, விஜய்க்காக என்னுடைய மாநில தலைவர் பதவியையும் விட்டுக் கொடுக்க தயாராக இருந்தேன். இதை எங்கள் தேசிய தலைமையிடமும் கூறினேன். பல்வேறு காரணங்களால் அது நடைபெறவில்லை. அப்போது அது நடந்திருந்தால் தமிழக அரசியலில் இப்போது ஏற்பட்ட மாற்றம், அப்போதே நடந்திருக்கும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+