‘தங்கலான்’ ஒடிடி ரிலீஸ்.. ஒளிபரப்ப தடை இல்லை.. சென்னை ஐகோர்ட் உத்தரவு!
சென்னை: 'தங்கலான்' திரைப்படத்தை ஓடிடியில் வெளியிட தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்ட பலரின் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான தங்கலான் இதுவரை ஓடிடி தளத்தில் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், ஓடிடி ரிலீஸுக்கு தடை கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூரை சேர்ந்த பொற்கொடி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான தங்கலான் படத்தில் வைணவர்களை அவமதிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

புத்த மதம் குறித்து புனிதமான முறையிலும் வைணவத்தை நகைச்சுவையாக சித்தரிக்கும் வகையில் காட்சிகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் விரைவில் ஒடிடியில் வெளியாக உள்ளதாகவும் அவ்வாறு வெளியானால் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே தங்கலான் படத்தை ஒடிடியில் வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவரது மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் அமர்வு, திரைப்படம் தணிக்கை சான்று பெற்று தான் திரைப்படம் வெளியாகி இருப்பதால் தங்கலான் திரைப்படத்தை ஒடிடி தளத்தில் வெளியிட எந்த ஒரு தடையும் இல்லை என உத்தரவிட்டு வழக்கை தள்ளுபடி செய்தனர்.
பா. ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான படம் 'தங்கலான்'. விக்ரம், மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் இன்னும் ஓடிடியில் வெளியாகவில்லை. இந்நிலையில் 'தங்கலான்' படம் தீபாவளியை முன்னிட்டு Netflix ஓடிடியில் ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தெரிகிறது.
தங்கலான் படத்தை ஓடிடியில் வெளியிட தடை கோரி வழக்கு தொடரப்பட்டிருந்ததால் இதுவரை ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகாமல் இருந்தது. இந்நிலையில் தடை கோரிய வழக்கு தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதால் தங்கலான் ஓடிடி வெளியீடு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
கடவுள் முன் அனைவரும் சமம் எனும்போது விஐபி தரிசனம் ஏன்? தமிழ்நாடு அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி! -
'கர' ஓடிடியில் பட்டையைக் கிளப்புது! ரிவ்யூவை நம்பி தியேட்டரில் மிஸ் செய்த ரசிகர்கள் குமுறல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications